தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 34,875 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடும் பணி நாளை தொடங்க உள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவித்துள்ளார்.

தமிழகத்தில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடும் பணியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை தொடங்கி வைக்க உள்ளநிலையில், அதில் ஆட்டோ டிரைவர்கள், தொழிலாளர்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் தமிழக சுகாதாரத்துறை கொரோனா வைரஸ் தொடர்பாக இன்று (மே 19) வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் இன்று 1,62,401 பேருக்கு கொரோனா பரிசோதனை நடந்துள்ளது. இதுவரை 2,60,91,007 பேருக்கு கொரோனா பரிசோதனை நடந்துள்ளது.

ஒரே நாளில் தமிழகத்தில் 34,875 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது. இதில் வெளிமாநிலங்களில் இருந்து 8 பேர் வந்துள்ளனர். இதுவரை மொத்தம் 16,99,225 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் கொரோனாவால் இன்று 365 பேர் மரணம் அடைந்துள்ளார். இதனால் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 18,734 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனவால் பாதிக்கப்பட்டவர்களில் இன்று 23,863 பேர் குணம் அடைந்துள்ளனர். இதுவரை 14,26,915 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 2,53,576 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

தமிழக கொரோனா பாதிப்பில் சென்னை முதல் இடத்தில் உள்ளது. இன்று சென்னையில் மட்டும் 6,297 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,56,496 ஆக உயர்ந்துள்ளது.

மேலும் சென்னையில் இன்று 91 பேர் உயிரிழந்துள்ளார். இதுவரை 3,031 பேர் மரணம் அடைந்துள்ளனர். இன்று 6,266 பேர் குணமடைந்து, மொத்தம் 4,02,139 பேர் குணம் அடைந்துள்ளனர். தற்போது சென்னையில் 48,326 பேர் சிகிச்சையில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஒரு பெண் பயணி நின்றாலும் பேருந்தை நிறுத்த வேண்டும்: தமிழக போக்குவரத்துத்துறை