ஸ்ரீஹரிகோட்டா விண்வெளி ஆய்வு மையத்தில் ஊழியர்களுக்கு கொரோனா தொற்று பரவியதால் பணிகள் நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனத்தின் கீழ் ஆந்திராவில் உள்ள ஸ்ரீஹரிகோட்டாவில் சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையம் இயங்குகிறது. அதில் பணியாற்றுபவர்கள், சூலூர்பேட்டையில் உள்ள 3 குடியிருப்புகளில் வசித்து வருகின்றனர்.

இந்நிலையில் அந்த குடியிருப்பில் வசிக்கும் 2 பணியாளர்களுக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டது. இருவரும் ஸ்ரீஹரிகோட்டாவில் தொழில்நுட்ப வல்லுனர்களாக பணியாற்றி வருகின்றனர்.

பாதிக்கப்பட்ட நோயாளிகள் இருவரும் உடனடியாக நெல்லூரில் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். 2 பேரும் கொரோனா பாதிப்புடன் பணியாற்றியதால் மற்றவர்களுக்கும் கொரோனா தொற்று பரவியிருக்கலாம் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து ஸ்ரீஹரிகோட்டா விண்வெளி ஆய்வு மையத்தில் அனைத்து பணிகள் நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மறு உத்தரவு வரும் வரை நீர், மின்சாரம், தீயணைப்பு தவிர ஏனைய சேவைகள் நிறுத்தப்படுவதாக கூறப்பட்டுள்ளது. ஆந்திர மாநிலத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிவேகமாக பரவி வருவது குறிப்பிடத்தக்கது.

மேலும் வாசிக்க: திருப்பதி கோயிலில் 20 வருட தலைமை அர்ச்சகர் கொரோனவால் உயிரிழப்பு