மத்திய ஜவுளித்துறை அமைச்சர் ஸ்மிருதி இராணியை காணவில்லை என்று அவரது சொந்த தொகுதி அமேதியில் அச்சடித்து ஒட்டப்பட்ட போஸ்டரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

பல்வேறு அதிரடிகளுக்கு மட்டுமல்லாமல், சர்ச்சைகளுக்கும் பெயர் பெற்றவர் ஸ்மிருதி இராணி. பாஜகவின் மத்திய ஜவுளித்துறை அமைச்சராக இருக்கிறார். இந்நிலையில், இவர் சம்பந்தமாக ஒரு போஸ்டர் தற்போது உத்திர பிரதேச மாநிலம் முழுவதும் மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

அந்த போஸ்டரில், ‘அமேதி தொகுதி எம்பி ஸ்மிருதி இராணியை காணவில்லை’ என்ற தலைப்பு போட்டு அந்த போஸ்டர்களை அமேதி தொகுதி முழுக்க ஒட்டியுள்ளனர். மேலும், கடந்த முறை தேர்தலில் ஜெயித்த பிறகு இந்த பக்கம் வரவே இல்லை. இந்த 2 வருஷத்தில் 2 நாட்கள் மட்டுமே, 2 மணி நேரம் மட்டுமே தங்கி இருந்து, அமேதியில் உங்கள் இருப்பை பதிவு செய்துவிட்டு சென்றீர்கள். அதற்கு பிறகு எங்கே சென்றீர்கள்?…

அமேதி தொகுதி என்ன உங்களுக்கு டூரிஸ்ட் ஸ்பாட்டாக போய் விட்டதா? என்றும் போஸ்டரில் குறிப்பிடப்பட்டிருந்தன. சொந்த தொகுதியிலேயே எம்பியை இப்படி கேள்விகளை கேட்டு போஸ்டர் ஒட்டியது யார் என தெரியவில்லை.

உண்மையிலேயே எம்பி ஸ்மிருதி இராணி தொகுதி பக்கம் வருவதே இல்லை என்கிறார்கள் மக்கள். கொரோனா பாதிப்பால் மிகவும் கஷ்டப்பட்டு வருகிறோம், ஆனால், எம்பி இங்கு வரவேயில்லை என்று அமேதி தொகுதி மக்களே வேதனையுடன் தெரிவித்துள்ளார்கள்.

மேலும் வாசிக்க: ‘GodMan’ பதற்றத்தில் பதறும் பாஜக நடிகர்