விஷால் நடித்துள்ள ‘சக்ரா’ படத்தின் ட்ரெய்லர் தற்போது வெளியாகி வைரலாகி உள்ளது. சக்ரா படம் ஆன்லைன் ஹேக்கர்கள் மோசடிகள் பற்றிய படமாக அமைந்துள்ளது.

எம்.எஸ்.ஆனந்தன் இயக்கியுள்ள சக்ரா படத்தில் விஷால் ராணுவ வீரராக நடித்துள்ளார். மேலும் ஷ்ரத்தா ஸ்ரீநாத் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். ரெஜினா, ரோபோ சங்கர், சிருஷ்டி டாங்கே, மனோபாலா, கே.ஆர். விஜயா உள்ளிட்ட பலரும் இப்படத்தில் நடித்துள்ளனர்.

ஆகஸ்ட் 15 சுதந்திர தினத்தன்று சென்னையில் போலீஸ் முழு கண்காணிப்பில் இருக்கும் நிலையில் 49 வீடுகளில் ஒரே நேரத்தில் கொள்ளை அடிக்கப்படுகிறது. அதனால் ஒட்டு மொத்த நகரமும் என்ன நடக்கிறது என தெரியாமல் பதற்றத்தில் இருக்கிறது. அதில் ஒரு வீட்டில் ராணுவ வீரர் ஒருவருக்கு வழங்கப்பட்ட அசோகச் சக்கரத்தை திருடர்கள் கொள்ளையடித்து செல்கின்றனர் என்பது போன்று ட்ரெய்லரில் காண்பிக்கப்படுகிறது.

[su_youtube url=”https://www.youtube.com/watch?v=wHiUlFH8AAQ&feature=youtu.be” width=”700″ autoplay=”yes” title=”விஷாலின் ‘சக்ரா’ ட்ரெய்லர்”]

மேலும் ஹேக்கர் ஒருவர் பேசும் வகையில் ட்ரெய்லரின் இறுதியில் வரும் ‘கண்ணுக்கு தெரியாத வைரஸ் மட்டும் இல்லை, வயர்லெஸ் நெட்வர்க்கும் ஆபத்து தான். வெல்கம் டு டிஜிட்டல் இந்தியா’ என்ற வசனமும் கவனத்தை ஈர்க்கிறது.

விஷால் பிலிம் பேக்டரி மூலமாக தயாரித்து நடித்துள்ள இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். சக்ரா படம் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் உள்ளிட்ட 4 மொழிகளில் வெளியாகிறது.

மேலும் வாசிக்க: திடீரென மாயமான சுஷாந்த் சிங் ட்விட்கள்.. எப்போது விலகும் மர்மங்கள்?