நயன்தாரா தற்போது விஜய் 63 படத்தில் பிஸியாக நடித்து வரும் நிலையில், நயன்தாராவின் ஐரா பட புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.

இமைக்கா நொடிகள் கோலமாவு கோகிலா, விஸ்வாசம் ஆகிய தொடர் வெற்றிப் படங்களைக் கொடுத்த நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ளது ஐரா. ஹாரர் ஜானரில் உருவாகியுள்ள இப்படத்தில், நயன்தாரா இரண்டு தோற்றங்களில் நடித்துள்ளார்.

லட்சுமி, மா ஆகிய குறும்படங்களை இயக்கிய சர்ஜூன் இப்படத்தை இயக்கியுள்ளார். படத்தில் நயன்தாராவுடன் கலையரசன், யோகிபாபு, ஜெயபிரகாஷ், லீலாவதி உள்பட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சமீபத்தில் வெளியான இப்படத்தின் டீசர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

ஐரா படத்தின் ட்ரெய்லர் வரும் 20-ம் தேதியும், படம் மார்ச் 28-ம் தேதியும் திரைக்கு வரும் என்றும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், ரிலீசுக்குத் தயாராகியிருக்கும் ஐரா படத்தை விளம்பரப்படுத்தும் பணிகளில் படக்குழு ஈடுபட்டுள்ளது. ஷுட்டிங் ஸ்பாட்டில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை அப்படக்குழு வெளியிட்டுள்ளது. இதனை நயன்தாரா ரசிகர்கள் சமூக வலைதளங்களில் வைரலாக்கி வருகின்றனர்.

மேலும், ஐரா, விஜய் 63 படங்களை தொடர்ந்து நடிகர் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக மிஸ்டர் லோக்கல் படத்திலும் நாயகியாக நடித்துள்ளார் நயன்தாரா. இப்படம் மே 1-ம் தேதி திரைக்கு வரும் என்றும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.