கர்நாடகா, கேரளா மற்றும் தமிழகத்தின் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியை ஒட்டிய பகுதிகளில் தென் மேற்கு பருவமழை மிக அதிமாக வருகிறது.இதன் காரணமாக பக்கத்து மாநிலங்களில் இருந்து தமிழக அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. கர்நாடகாவில் திறக்கப்பட்ட உபரி நீரால் காவிரி கரையோரங்களில் வெள்ளநீராக புகுந்துள்ளது.

1959 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் திறந்து வைக்கப்பட்ட வைகை அணை நீர்த்தேக்கம் தேனி மாவட்டத்தில் வருசநாடு மலைப்பகுதியில் உருவாகி ஓடி வரும் வைகை ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ளது இந்த அணை 111அடி உயரம் உடையது. இந்த அணையின் நீர்த்தேக்கப் பகுதியில் 71அடி நீரைத் தேக்கி சேமித்து வைக்க முடியும் .

பெரியாறு மேற்குத் தொடர்ச்சி மலையில் தொடங்கி மேற்குநோக்கி ஓடி அரபிக்கடலில் கலக்கிறது. இவ்வாற்றின் நீரை கிழக்கு நோக்கித் திருப்பி, மழைமறைவுப் பகுதியான மதுரை மாவட்டத்திற்குப் பயன்பட வகை செய்வதற்காகவே முல்லைப் பெரியாறு அணை கட்டப்பட்டது.

அப்பகுதிகளுக்கு அங்குள்ள சிறிய ஆறான வைகையாற்றின் நீர்வளம் போதுமானதாக இல்லை. அணை கட்டியதால் உருவான தேக்கடி நீர்த் தேக்கத்திலிருந்து தண்ணீர் கிழக்கு நோக்கி சுரங்கம் வழியாக வைகை ஆற்றுடன் இணைக்கப்படுகிறது. முதலில் அணையிலிருந்து குமுளிக்கு அருகிலுள்ள ஃபோர்பே அணைக்கு தண்ணீர் திருப்பிவிடப்பட்டு அங்கிருந்து கீழ் பெரியாறிலுள்ள பெரியாறு மின்சக்தி நிலையத்திற்கு கொண்டு செல்லப்படுகிறது. பின் அங்கிருந்து சுருளியாற்றுக்கும், அதிலிருந்து வைகையாற்றையும் அடைகிறது

தற்போது 66 அடியை தாண்டி 69 எட்டியுள்ளதால் பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல ஆட்சியர் பல்லவி பல்தேவ் அறிவுறுத்தியுள்ளார். இதனால் அணையிலிருந்து நீர் திறக்கப்படவுள்ளதால் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் வைகை ஆற்றங்கரையோர மக்களுக்கு முதற்கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை அறிவிக்கப்பட்டுள்ளது.