மத்திய அரசு அளித்துள்ள பரிந்துரைகளை நிராகரித்துள்ள விவசாயிகள் தங்கள் போராட்டத்தை தேசிய அளவில் தீவிரப்படுத்த முடிவு செய்துள்ளனர்.

மத்திய பாஜக அரசு நிறைவேற்றி உள்ள வேளாண் சட்டங்களுக்கு நாடெங்கும் கடும் எதிர்ப்பு நிலவி வருகிறது. விவசாய பிரதிநிதிகளுடன் மத்திய அரசு 6 கட்ட பேச்சு வார்த்தை நடத்தியும் முடிவு எட்டப்படாமல் உள்ளது. வேளான் சட்டத்தைத் திரும்பப் பெற வேண்டும் என்பதில் விவசாயிகள் உறுதியாக உள்ளனர்.

இதுதொடர்பாக விவசாய சங்க பிரதிநிதிகளுடன் உள்துறை அமைச்சர் அமித்ஷா நடத்திய பேச்சுவார்த்தையில், வேளாண் சட்டங்களை திரும்பபெற முடியாது என்று கூறிய மத்திய அரசு, சில திருத்தங்கள் செய்ய தயராராக இருப்பதாக தெரிவித்து.

அதுகுறித்து விவசாய சங்க பிரதிநிதிகளுக்கு எடுத்துரைக்கப்பட்டு, மத்திய அரசின் யோசனைகள் அடங்கிய 20 பக்க குறிப்பு விவசாயிகள் சங்க பிரதிநிதிகளிடம் வழங்கப்பட்டது.அதில் எந்தெந்த திருத்தங்களுக்கு அரசு தயாராக உள்ளது என்பது தெளிவுபடுத்தப்பட்டிருந்தது.

மத்திய அரசின் யோசனையை நிராகரித்த விவசாயிகள் போராட்டத்தை தீவிரப்படுத்த முடிவு செய்துள்ளனர். அதன்படி வரும் 12 ஆம் தேதி டெல்லி ஜெய்ப்பூர் தேசிய நெடுஞ்சாலை உள்பட நாடு முழுவதும் உள்ள சுங்கச்சாவடிகளை முற்றுகையிட்டு, போராட்டம் நடத்தவும் முடிவு செய்துள்ளனர்.

தொடர்ந்து, டிசம்பர் 14 ஆம் தேதி அன்று நாடு முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் விவசாயிகள் போராட்டம் நடைபெறும் என்றும், பாஜக தலைவர்கள் கெரோ செய்யப்படுவார்கள் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த போராட்டம் நாடெங்கும் விரிவுபடுத்தப்படும் எனவும் இதற்காக அனைத்து விவசாயிகளும் டெல்லியில் ஒன்று கூட வேண்டும் எனவும் வலியுறுத்தி உள்ளனர்.

வீட்டுக்காவலில் முடக்கப்பட்ட டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்