உத்தரப் பிரதேச யோகி ஆதித்யநாத் அரசின் ‘ஒரு மாவட்டம் ஒரு தயாரிப்பு’ திட்டத்தின் விளம்பர தூதராக நடிகை கங்கனா ரனாத் நியமிக்கப்பட்டுள்ளார்.

உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. அங்கு மாநிலத்தின் அனைத்து மாவட்டங்களிலும் ‘ஒரு மாவட்டம் ஒரு தயாரிப்பு’ (One district one product- ODOP) என்கிற திட்டத்தை ஏற்படுத்தி உள்ளார் யோகி ஆதித்யநாத்.

இந்நிலையில் மாநில அரசின் ‘ஒரு மாவட்டம் ஒரு தயாரிப்பு’ திட்டத்தினை மக்களிடம் கொண்டு செல்லும் விளம்பர தூதராக பாலிவுட் முன்னணி நடிகையான கங்கனா ரனாத் நியமிக்கப்பட்டுள்ளார். இதனையடுத்து நடிகை கங்கனா ரனாத், முதல்வர் யோகி ஆதித்யநாத்தை சந்தித்தார்.

இச்சந்திப்பின்போது, ராமர் கோவிலின் பூமி பூஜையில் பயன்படுத்தப்பட்ட நாணயத்தை கங்கனாவுக்கு முதல்வர் யோகி ஆதித்யநாத் பரிசளித்தார்.

இதுகுறித்து மாநில அரசின் கூடுதல் தலைமைச் செயலாளர் நவநீத் தனது பதிவில், “பிரபல நடிகை கங்கனா ரனாத் மாண்புமிகு முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் அவர்களை சந்தித்தார். கங்கனா ரனாத் உத்தரப்பிரதேச மாநில அரசின் ‘ஒரு மாவட்டம் ஒரு தயாரிப்பு’ (ODOP) திட்டத்திற்கான எங்கள் பிராண்ட் தூதராக இருப்பார்” என்று அறிவித்துள்ளார்.

இதுகுறித்து கங்கனா ரனாத் கூறுகையில், “முதல்வர் யோகி ஆதித்யநாத்துடனான சந்திப்பை மறக்கமுடியாதது. வரவிருக்கும் தேர்தல்களில் முதல்வர் யோகி ஆதித்யநாத் வெற்றி பெற நல்வாழ்த்துகள். மகாராஜ் ஜி உங்கள் ஆட்சி தொடரட்டும்” என்று தெரிவித்துள்ளார். மேலும் ராம் ஜனம் பூமி பூஜையில் பயன்படுத்தப்பட்ட ஒரு நாணயத்தை முதல்வர் தனக்கு பரிசளித்ததாகவும் ரனாவத் குறிப்பிட்டுள்ளார்.

https://www.instagram.com/p/CUfaCRMhW44/?utm_source=ig_web_copy_link

கொரோனா காலத்தில் தினசரி ரூ.1,002 கோடி வருமானம்- மோடி ஆட்சியில் அதானியின் அசுர வளர்ச்சி