சென்னை எம்.ஆர்.சி.நகரில் உள்ள செட்டிநாடு வித்யாஷ்ரம் பள்ளியில் நடந்த நிகழ்ச்சியில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கலந்துகொண்டு மாணவர்கள் மத்தியில் பேசிய போது “நான் வித்தியாசமான, வினோதமான அரசியல்வாதி. அரசியலில் எதுவும் சரியில்லை. அதனை சரி செய்ய வேண்டும். தாமதமாக அரசியலுக்கு வந்ததற்கு மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். அரசியல் மாணவர்களுக்கு தேவையில்லாத ஒன்று என்பது என்னால் ஏற்றுக்கொள்ள முடியாத வாதம். மாணவர்களுக்கு மட்டுமல்ல யாருமே அரசியலை நீக்கிவிட்டு வாழ முடியாது. சாதி பெருமை பற்றி பேசாமல் இருந்தால் கலவரங்கள் எண்ணிக்கை குறைந்துவிடும்.
 
சட்டையை கிழித்துக்கொண்டு தெருவில் நிற்க முடியாது. சட்டமன்றத்தில் கூட சட்டையை கிழித்துக்கொண்டு நிற்க மாட்டேன். அப்படி கிழிந்தாலும் வேறு நல்ல சட்டை போட்டுக்கொண்டுதான் வெளியில் வருவேன். தமிழகம் என்னும் குழந்தை தடுமாறிக் கொண்டிருக்கின்றது. அதனை யாரும் தட்டி கொடுக்கவும் இல்லை. கொஞ்சவும் இல்லை. அந்த குழந்தையை நீங்கள் கையில் எடுங்கள்.
 
ரத்தம் வந்தால் அதனை முதலில் தடுத்து நிறுத்தவேண்டும். உடனடியாக அறுவை சிகிச்சைக்கு செல்ல முடியாது. அறுவை சிகிச்சையும் அவசியம். ராணுவ வீரர்கள் 40 பேர் இறந்துள்ளனர். கொடூரமான விஷயம் தான். உங்களது பெற்றோர் ராணுவத்துக்கு செல்லவேண்டாம் என்றால் அவர்களிடம் சொல்லுங்கள், ராணுவத்தில் உயிர் இழப்பவர்களை விட தமிழகத்தில் சாலை விபத்தில் உயிர் இழப்பவர்கள் தான் அதிகம் என்று.
 
ராணுவ வீரர்கள் இறப்பதற்கு தான் ராணுவத்துக்கு வருகிறார்கள் என்கிறார்கள். 2 நாட்டின் அரசியல் தலைவர்களும் அமர்ந்து பேசினால் ராணுவ வீரர்கள் உயிரிழக்க வேண்டியதில்லை. இவ்வாறு செய்தால் எல்லைக்கோடு நம் கட்டுப்பாட்டில் இருக்கும்.
 
கட்சியை தொடங்கிவிட்டு தேர்தலில் போட்டியிடமாட்டேன் என்று சொல்வது முறையல்ல. அவ்வாறு செய்தால் யாரும் மதிக்கமாட்டார்கள். நாங்கள் எடுத்தது சரியான முடிவு தான். கட்சி தொடங்கிய ஒரு வருடத்தில் எதை, எதை செய்யக்கூடாது? என்பதை தெரிந்து கொண்டேன். பொது அறிவு கூட இல்லாதவர்கள் சிலர் தலைவர்களாக இருக்கிறார்கள்.
 
எனக்கு பொது அறிவு இருக்கிறது. இதனால் எனக்கும் ஒரு வாய்ப்பு இருக்கிறது என்ற தன்னம்பிக்கை கிடைத்துள்ளது. கிராம சபை கூட்டம் ஒன்று இருப்பது யாருக்கும் தெரியாதா? நேற்று வந்த பையனை பார்த்து காப்பி அடிப்பதற்கு வெட்கமாக இல்லையா?.
 
இதையடுத்து நிருபர்களுக்கு பேட்டியளித்த கமல்ஹாசன், “தி.மு.க.வை கடுமையாக விமர்சிப்பதற்கு தி.மு.க.வே காரணம். மறைமுகமாக அல்ல நேரடியாகவே நான் விமர்சிப்பேன். கூட்டணியில் இடம் பெற முடியாததால் தி.மு.க.வை விமர்சிக்கவில்லை. டி.டி.வி.தினகரனுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடப்பதாக வந்த தகவல் உங்களுக்கு வேண்டுமானால் நல்ல தகவலாக இருக்கலாம். ஆனால் எனக்கு அல்ல” என்றார்.
 
ஆனால் சமுக வலைதளத்தில் கிராம சபையை ஸடாலின் 2008 ஆம் வருடத்திலே நடத்தி இருபபதை ஆதாரத்துடன் போட்டு யாரை யார் காப்பி அடித்தது என்றும் மேலும் கமல் காப்பி அடித்த ப்டத்தின் பெயர்களை போட்டு #copycatkamal என்றும் ஹாஷ்டாக் பேசி வருவதால் என்ன் செய்வது என்ற குழப்பதில் கமலின் ரசிகர்கள் உள்ளார்களாம்
 
ஆனால் கமலின் பேச்சை குறித்து ஸ்டாலினிடம்  கேட்ட போது அதை பற்றி கருத்து கூற மறுத்து நாசூக்காக தவிர்த்து விட்டதும்  குறிப்பிடத்க்கது.