பிரதமர் மோடி மற்றும் ஒன்றிய அமைச்சர் அமித்ஷாவை விமர்சித்து அமெரிக்க முன்னாள் டென்னிஸ் வீராங்கனை மார்டினா வெளியிட்ட ட்விட்டர் பதிவு தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
பிரதமர் மோடி குறித்து, ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா தொலைக்காட்சி ஒன்றியில் பேசியிருந்தார். அமித்ஷா தனது பேட்டியில், “எங்களைச் சிலர் சர்வாதிகாரி என கூறிவருகிறார்கள். மோடி போன்று கருத்துகளுக்குக் காது கொடுப்பவரை நான் பார்த்ததில்லை.
அனைவரது கருத்துக்களையும் கேட்டு முடிவெடுப்பார். ஒரு விஷயத்தில் இவ்வளவு யோசிக்க என்ன இருக்கிறது என்று நாங்கள் அடிக்கடி நினைப்போம். ஆனால் பல முறை யோசித்தே மோடி முடிவை எடுப்பார்” எனக் குறிப்பிட்டிருந்தார்.
இவரின் இந்தப் பேச்சைக் குறிப்பிட்டு அமெரிக்க முன்னாள் டென்னிஸ் வீராங்கனை மார்டினா நவ்ரதிலோவா ஒரு ட்வீட் செய்துள்ளார். அவர் தனது பதிவில், மோடி குறித்து அமித்ஷா பேட்டியை இணைத்து, ‘இது தமக்கான அடுத்த நகைச்சுவை’ எனப் பதிவிட்டுள்ளார். இது பாஜகவினரை அதிர்ச்சியடைய செய்துள்ளது.
டென்னிஸ் வீராங்கனை மார்டினாவின் இந்த பதிவு தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. பலரும் அவரது ட்விட்டை சேர் செய்து, ‘சரியான பதிலடி’ என்று அவருக்குப் பாராட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர்.
மேலும் இனி இந்தியப் பிரபலங்கள் மார்டினா நவ்ரதிலோவாவை வம்புக்கு இழுப்பார்கள் எனவும் பதிவிட்டுள்ளனர். அதேநேரம் மார்டினாவின் பதிவிற்கு பாஜகவினர் பலரும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.