உத்தரப் பிரதேசத்தில் #பாஜக உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் கூட்டணி விஷயத்தில் மண்டயை பிய்த்து கொண்டிருக்க, இன்று அதிரடியாக சமாஜ்வாடி கட்சி 40 சட்டமன்ற சீட்டுகளை ராஷ்டிரிய லோக் தல் கட்சிக்கு (Rashtriya Lok Dal-RLD) ஒதுக்கியுள்ளதே..

கூட்டணி அறிவிப்பை உறுதி செய்து இணைத்துள்ள இந்த படத்தினை போட்டு மாற்றத்தை நோக்கி நாங்கள் என அகிலேஷ் யாதவ் டிவிட்டி உள்ளார்..

அயோத்தி நிலப் பிரச்சினை ஒருதலைபட்சமாக முடிவுக்கு வந்ததால் இந்த முறை மதமல்ல.. மாறாக ஜாதி அங்கு வெற்றியை நிர்மாணிக்கும் என்பதால்.. சென்ற முறை 2019 தேர்தல் அறிக்கையில் பாஜக கூறிய சாதி வாரி கணக்கெடுப்பை செய்யாமல் ஏமாற்றிய நிலையில்..

அகிலேஷ் யாதவ் இந்த முறை கண்டிப்பாக தனது கட்சி ஆட்சிக்கு வந்தால் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தும் அதன் மூலம் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் நலன்களை உறுதி செய்யும் என்று அறிவித்த நிலையில்..

யாதவர்கள்(32%) மற்றும் ஜாட்(9%) மற்றும் முஸ்ஸிம்(21%) கூட்டணியின் ஓட்டு வங்கி உத்தரப் பிரதேசத்தில் 62% என்றாகி இருப்பதால்.. 403 இடங்களை கொண்ட சட்டமன்றத்தில், காங்கிரஸ் கூட்டணிக்கு வராத பட்சத்திலும்..

இந்த சமூகத்தை அதிகமாக பிரதிபலிக்கும் கூட்டணியை கொண்டுள்ளதால்.. இதில் 60% சாதகமாக்கினாலும் கூட சமாஜ்வாடி கூட்டணி கட்சிகள் 35%~ 37% ஓட்டுகளை பெற்று 220~270 தொகுதிகளை வெல்லும் என்றே வெற்றி வாய்ப்புகள் நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தல்களிலும் அதிகமாக வென்ற சமாஜ்வாடி கட்சிக்கு அதிகமாக உள்ளதாக அங்குள்ள தகவல்கள் தெரிவிக்கின்றன..

2019 தேர்தலில் vvpat எண்ணிக்கை அறிவிக்காமல் தேர்தலை நடத்தி முடித்து தேர்தல் ஆணையம் செயலை.. தேர்தலுக்கு முன்னரே 2021 தேர்தலில் உயர்நீதிமன்றத்தில் வழக்கு போட்டு செக் வைத்த திமுக போல..

உத்திரபிரதேச மாநிலத்திலும் பாஜக அல்லாத கட்சிகள் செயல்பட்டால் எதிர்க்கட்சிகளின் வெற்றிவாய்ப்பு மேலும் அதிகரிக்கவே செய்யும்.

இனி இந்தியாவின் நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னோட்டமாக அமையப்போகும் உத்தரப் பிரதேச தேர்தல் நேரத்தில் மேலும் பரபரப்பான செய்திகள் வரக்கூடும்..

https://www.facebook.com/savenra/posts/7418577224834803