இந்தியாவுக்கு எதிரான முதல் டி 20 போட்டியில் ஆஸ்திரேலியா அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
 
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலியா அணி 2 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது.
 
இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டி 20 போட்டி விசாகபட்டினத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
 
இதனையடுத்து களமிறங்கிய இந்திய அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 126 ரன்கள் எடுத்தது. இந்திய அணி தரப்பில் ராகுல் 50, தோனி 29, கோலி 24 ரன்களும் எடுத்தனர்.
 
ஆஸ்திரேலியா அணி தரப்பில் சிறப்பாக பந்துவீசிய குல்டர் நைல் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
 
இதனையடுத்து 127 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலியா அணி துவக்கத்தில் அடுத்தடுத்து 2 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
 
பின்னர் வந்த மேக்ஸ்வெல்-ஷார்ட் ஜோடி பொறுமையாக விளையாடி அணியை சரிவிலிருந்து மீட்டது. அதிரடியாக விளையாடிய மேக்ஸ்வெல் 56 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.
 
இறுதியில் 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து ஆஸ்திரேலியா அணி வெற்றி இலக்கை எட்டியது. இதன்மூலம் 2 போட்டிகள் கொண்ட டி 20 தொடரில் ஆஸ்திரேலியா அணி 1-0 என முன்னிலை வகிக்கிறது.
 
இப்போட்டியில் தோல்வியுற்றதால் அடுத்த போட்டியில் வென்றாக வேண்டிய கட்டாயத்தில் இந்திய அணி உள்ளது. அடுத்த போட்டியில் வென்றால் மட்டுமே இந்திய அணியால் தொடரை சமன் செய்ய முடியும், இல்லையெனில் தொடரை இழக்க நேரிடும்.