மத்திய சேமிப்பு கிடங்கில் காலியாக உள்ள 571 மேலாண்மை டிரெய்னி, உதவி பொறியாளர், கணக்காளர் போன்ற பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி மற்றும் காலியிடங்கள்: 571
1. Management Trainee (General) – 30
சம்பளம்: மாதம் ரூ.50000-160000

2. Management Trainee (Technical) – 01
சம்பளம்: மாதம் ரூ.50000-160000

3. Assistant Engineer (Civil) – 18
சம்பளம்: மாதம் ரூ.40000-140000

4. Assistant Engineer (Electrical) – 10
சம்பளம்: மாதம் ரூ.40000-140000

5. Accountant – 28
சம்பளம்: மாதம் ரூ.40000-140000

6. Superintendent (General) – 88
சம்பளம்: மாதம் ரூ.40000-140000

7. Junior Superintendent – 155
சம்பளம்: மாதம் ரூ.11200-30600

8. Hindi Translator – 03
சம்பளம்: மாதம் ரூ.11200-30600

9. Junior Technical Assistant – 238
சம்பளம்: மாதம் ரூ.10500-28690

தகுதி: பொறியியல் துறை பட்டதாரிகள், கலை, அறிவியல் துறையைச் சேர்ந்த பட்டதாரிகள், மனித வளம், மேலாண்மை, தொழிலக உறவு, சந்தையியல் போன்ற துறைகளில் எம்பிஏ முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் தேர்வு, நேர்முகத்தேர்வு மற்றும் சான்றிதழ்கள் சரிபார்ப்பு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி, ஆண் விண்ணப்பதாரர்கள் ரூ.1000 செலுத்த வேண்டும். மற்ற அனைத்து பிரிவைச் சேர்ந்தவர்களும் தகவல் கட்டணமாக ரூ.300 மட்டும் ஆன்லைனில் செலுத்த வேண்டும்.

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 16.03.2019

விண்ணப்பிக்கும் முறை: மத்திய சேமிப்பு கிடங்கு (Central warehousing corporation) என்ற இணையதளத்தில் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

மேலும் வேலைவாய்ப்பு பற்றி முழுமையான விவரங்கள் அறிய…