மத்திய பாஜக அரசு, மத்திய அரசின் கல்வி நிறுவனங்களுக்கு மட்டும் ‘INI-CET’ எனும் தனி நுழைவுத் தேர்வை அறிவித்திருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

எய்ம்ஸ், ஜிப்மர் உள்ளிட்ட 11 கல்லூரிகளுக்கு நாட்டின் சீர்மிகு கல்வி நிறுவனங்கள் என அந்தஸ்து அளித்து, இந்த கல்லூரிகளில் எம்.டி., எம்.எஸ் உள்ளிட்ட உயர் மருத்துவப் படிப்புகளில் சேர ‘INI-CET’ எனும் பெயரில் தனி நுழைவுத் தேர்வு நடத்தப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது

இந்நிலையில் மருத்துவ முதுநிலைப் படிப்புகளுக்கான நீட் தேர்விலிருந்து மாநிலங்களுக்கு விலக்களிக்க மறுக்கும் மத்திய அரசு, மத்திய அரசின் கல்வி நிறுவனங்களுக்கு மட்டும் தனி நுழைவுத் தேர்வை நடத்தவிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து சமூக சமத்துவத்திற்கான மருத்துவர்கள் சங்கம் கூறுகையில், “தேசிய முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள் என்று கூறி மத்திய அரசின் மருத்துவ கல்லூரிகளுக்கு மட்டும் ஒரு தேர்வை நடத்துவது ஏற்றுக்கொள்ள முடியாது.

இந்தியாவில் நீட் தேர்வை அறிமுகப்படுத்திய மத்திய அரசு அதன் கல்வி நிறுவனங்களுக்கு மட்டும் புதிதாக ஒரு தேர்வை நடத்துவது தவறானது, அரசியலமைப்பு சட்டத்துக்கு முற்றிலும் எதிராக மத்திய அரசின் போக்கு உள்ளது.

இது மாநில உரிமைகளை பறிக்கும் செயல். மாநிலங்களுக்கு தேர்வு நடத்தும் உரிமையை கொடுக்க வேண்டும். அதற்கான இட ஒதுக்கீட்டை அப்போது தான் பூர்த்தி செய்ய முடியும். அனைத்துக் கட்சிகளும் இதுபோன்ற தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும்” என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

40% குறைக்கப்பட்ட பாடங்கள் குறித்து தெளிவாகக் கூறுங்கள்.. ஆசிரியர் சங்கம் வேண்டுகோள்