அரசு மருத்துவக்கல்லூரியில் முதலாமாண்டு மாணவர்களை ராகிங் செய்த இரண்டமாண்டு மாணவர்கள் 20 பேரை 6 மாதம் இடைநீக்கம் செய்து நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்துள்ளதாக மதுரை அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் மருதுபாண்டியன் கூறினார்.

மதுரை அரசு மருத்துவ கல்லூரியில் முதலாமாண்டு மாணவர்கள் வா்கள் தங்கியிருந்த விடுதிக்குள், இரண்டாமாண்டு மாணவர்கள் அத்துமீறி நுழைந்து ராகிங்கில் ஈடுபட்டுள்ள நிலையில் இதற்கு முதலாமாண்டு மாணவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இதனால் ஆத்திரமடைந்த இரண்டாம் ஆண்டு மாணவர்கள், முதலாமாண்டு மாணவர்களை சரமாரியாக தாக்குதலில் காயமடைந்த மாணவர்கள், இந்த சம்பவம் தொடா்பாக கல்லூரி நிர்வாகத்திடம் புகார் அளித்தனர். அதன்பேரில் மருத்துவக்கல்லூரி முதலாண்டு மாணவர்கள் விடுதியின் சிசிடிவி கேமரா பதிவுகளைக் கொண்டு ராகிங்கில் ஈடுபட்ட மாணவா்களிடம் மருத்துவக் கல்லூரி ராகிங் தடுப்புக் குழு நிர்வாகத்தினர் விசாரணை நடத்தினார்.

இந்த நிலையில், நேற்று மதியம் மருத்துவ கல்லூரியில் செயல்பட்டு வரும் ராகிங் தடுப்பு குழுவினருடன், கல்லூரி முதல்வர் மருதுபாண்டியன் ஆலோசனை நடத்தினார்.

அந்த ஆலோசனை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து முதல்வா் மருதுபாண்டியன் கூறும்போது, “முதலாம் ஆண்டு மாணவர்களை. இரண்டாம் ஆண்டு மாணவா்கள் சுமார் 20 பேர் ராகிங் செய்துள்ளனார் இது விசாரணையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து அந்த 20 மாணவா்களும் 6 மாதத்திற்கு கல்லூரியில் இருந்தும், விடுதியில் இருந்தும் இடைநீக்கம் செய்து நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. அந்த தகவல் மாணவா்களின் பெற்றோருக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுபோல் வரும் காலங்களில் யாரும் ராகிங்கில் ஈடுபடக்கூடாது, ஈடுபட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார்.