பாஜக கட்சி ஐந்து மாநில தேர்தலிலும் கிடைத்த 5-0 படுதோல்வி முடிவுகள் வெளியான 11-ம் தேதி அன்று முதல் பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது.
 
துவங்கிய முதல் நாளில் இருந்தே எதிர்க்கட்சிகள் ரபேல் விவகாரம் உள்பட பல்வேறு விவகாரங்களை முன்வைத்து அமளியில் ஈடுபட்டு வருவதால் அவை நடவடிக்கைகள் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருகின்றன.
 
மேலும் பாராளுமன்ற வளாகத்திலும் உறுப்பினர்கள் தொடர்ந்து தங்களது கோரிக்கைகள் எழுதப்பட்ட பதாகைகளை ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
 
இந்நிலையில் வெள்ளியன்று காலை 11 மணிக்கு பாராளுமன்றம் மீண்டும் கூடியது. அப்போது மக்களவையில் மேகேதாட்டு விவகாரம் தொடர்பாக அதிமுக உறுப்பினர்களும், ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து கோரிக்கையினை முன்வைத்து தெலுங்குதேசம் கட்சி உறுப்பினர்கள் மற்றும் ஆம் ஆத்மி கட்சி உள்ளிட்ட பிற கட்சி எம்பிக்களும் தங்கள் மாநிலம் சார்ந்த கோரிக்கைகளை முன்வைத்து அமளியில் ஈடுபட்டனர்.
 
இதனால் முதலில் பகல் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்ட மக்களவை பின்னர் தொடர் அமளியில் காரணமாக நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.
 
இனி கிறிஸ்துமஸ் விடுமுறைக்கு பிறகு, இனி வரும் 27 ஆம் தேதிதான் பாராளுமன்றம் கூட உள்ளது. மேலும் மாநிலங்களவையிலும் இதே போக்கு தொடர்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
 
மக்களவையை தொடர்ந்து எட்டு  நாட்கள் நடக்கமால் இருப்பது அது மத்திய அரசின் வலுவற்ற தன்மையை காட்டுவதாக உள்ளதாக அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்து உள்ளனர்.