சென்னையில் போக்குவரத்து விதிமீறலில் ஈடுபடும் வாகன ஓட்டிகளிடம் இருந்து பேடிஎம் மூலம் அபராதம் வசூலிக்கும் நடைமுறையை சென்னை மாநகர காவல்ஆணையர் சங்கர் ஜிவால் தொடங்கி வைத்தார்.

சென்னை போக்குவரத்து சிறப்பு காவல் உதவி ஆய்வாளர்கள் 300 பேருக்கு கியூ ஆர் கோடு பொருந்திய கருவி வழங்கி அறிமுகப்படுத்தி, பேடிஎம் மூலம் அபராதம் வசூலிக்கும் நடைமுறையை சென்னை மாநகர காவல் ஆணையர் தொடங்கி வைத்தார்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய காவல் ஆணையர் சங்கர் ஜிவால், “2018 ஆம் ஆண்டிற்கு பிறகு இ-சலான் மூலம் அபரதாம் விதிக்கப்பட்டது. ஆனால் போக்குவரத்து விதிகளை மீறும் வாகன ஓட்டிகள் அபராத தொகை கட்டுவதில் தாமதம் ஏற்படுகிறது.

தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ள பேடிஎம் QR code மூலம் போக்குவரத்து விதிகளை மீறும் வாகன ஓட்டிகள் அபரதாம் செலுத்துவதில் சிரமம் இருக்காது. இன்றுதான் இந்த பேடிஎம் அபராதம் கட்டுவது அறிமுகப்படுத்தியுள்ளேன்.

இதனை தொடர்ந்து சென்னை முழுவதும் இந்த முறை அறிமுகப்படுத்த உள்ளோம். தற்போது 300 பேடிஎம் அட்டைகளை போக்குவரத்து காவலர்களுக்கு கொடுத்துள்ளோம்” என்று கூறினார்.