சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பு அதிகாரி பொன்.மாணிக்கவேல் நியமனத்திற்கு தடையில்லை என்று அதிரடி உத்தரவை உச்சநீதிமன்றம் பிறப்பித்துள்ளது.
 
சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பு அதிகாரி பொன்.மாணிக்கவேல் நியமனத்தை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தமிழக போலீசார் 66 பேர் மனுத்தாக்கல் செய்தனர்.
 
போலீஸ் அதிகாரிகளை பொன்.மாணிக்கவேல் தரக்குறைவாக நடத்துவதாக மனுவில் புகார் தெரிவித்துள்ளனர்.
 
பொன் மாணிக்கவேல் தங்களுடையை விசாரணையில் தலையிட்டு, கொடுமைப்படுத்துவதாக காவல் அதிகாரிகள் மனுவில் குற்றம் சாட்டியுள்ளனர். தமிழக காவல்துறையில் ஐஜியாக இருந்த பொன்.மாணிக்கவேல் சிலை கடத்தல் வழக்குகளை விசாரித்து வந்தார்.
 
ஆனால் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ஓய்வு பெற்றார். அவர் ஓய்வு பெற்ற பிறகும் சிலைக்கடத்தல் வழக்கில் ஓராண்டு சிறப்பு அதிகாரியாக நியமித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
 
இதனை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்த வழக்கு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வரும் நிலையில் பொன்.மாணிக்கவேல் கீழ் பணிபுரியம் 66 காவல்துறை அதிகாரிகள் உச்சநீதிமன்றத்தில் புதிதாக மனுவை தாக்கல் செய்துள்ளனர்.
 
அந்த மனுவில் பொன்.மாணிக்கவேல் கீழ் தாங்கள் பணிபுரிந்து வருவதாகவும், எங்களை அவர் எங்களை மதிப்பதில்லை என்று குற்றம் சாட்டியுள்ளனர்.
 
மேலும் எங்களுக்கு சரியான முறையில் விடுப்புகள் வழங்கப்படுவதில்லை என்றும், அதிக அழுத்தம் கொடுக்கிறார் என்றும் குற்றம் சாட்டியுள்ளனர்.
 
இந்த வழக்கில் அதிக அழுத்தம் கொடுப்பாதால் எங்களுக்கு மன ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். எனவே அவருக்கு அளித்துள்ள ஓராண்டு காலம் பணி நீட்டிப்பை ரத்து செய்ய வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தனர்.
 
இந்த வழக்கின் விசாரணையின் போது சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பு அதிகாரி பொன்.மாணிக்கவேல் நியமனத்திற்கு தடையில்லை என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.