புகை போடுதல் மூலம் அழுத்தமான காற்று அவர்களின் வாய் வழியே சென்று நுரையீரலை பாதிக்கும் வாய்ப்பு உள்ளது. எனவே பொது இடங்களில் ஆவி பிடித்தல் நிகழ்ச்சிகளை நடத்தக் கூடாது என்று தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வலியுறுத்தி உள்ளார்.

கொரோனா தொற்று தாக்குதலில் முக்கிய பகுதியான தொண்டை மற்றும் சுவாசப்பாதைகளை வைரஸ் தொற்றில்லாமல் பாதுகாக்க பாலில் மஞ்சள் தூள் கலந்து பருகுவது, சூடான தண்ணீரை அருந்துவது, கொதிக்கும் நீரில் மஞ்சள், வேப்பிலை உள்பட சில தமிழ் மருந்துகளை போட்டு ஆவி பிடித்தல் போன்ற இயற்கை முறைகள் ஊக்குவிக்கப்படுகின்றன. இதற்கு மக்களிடையே நல்ல வரவேற்பு உள்ளது.

ஆனால் வானதி சீனிவாசன் உள்பட தமிழக பாஜக கட்சியினர் பொது இடங்களில் ‘ஆவி பிடித்தல்’ நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர். மேலும் சமூக வலைத்தளங்களிலும் இதனை ஊக்குவித்து தகவல்களை பரப்பி வருகின்றனர். பாஜகவினரின் இச்செயலுக்கு மருத்துவ நிபுணர்கள் உள்பட பலரும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இதுகுறித்து மருத்துவர்கள் கூறுகையில், இதுபோன்று பொதுமக்கள் கூடும் இடங்களில் ஆவி பிடிப்பதால் கொரோனா தொற்றுள்ளவரும் அதில் பங்கேற்க வாய்ப்புண்டு. அதனால் மற்றவர்களுக்கும் தொற்று அதிகரிக்குமே தவிர குறையாது. இது கொரோனா பரவலை ஊக்குவிக்கும் செயல் என்று மருத்துவ நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

இந்நிலையில் பொதுமக்கள் மருத்துவரின் அறிவுரை இல்லாமல் முக நூல்கள் மற்றும் சமூக வலைதளங்களில் வருகின்ற புகை போடுதல் என்ற ஒன்றை சுயமாக எடுத்துக் கொள்ள கூடாது என தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இன்று (மே 17) சென்னை லயோலா கல்லூரியில் கொரோனா சிகிச்சை மையத்தை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார். அப்போது பேசிய அவர் பொது இடங்களில் ஆவி பிடிக்கும் நிகழ்ச்சிகளை நடத்தக் கூடாது. இதனால் கொரோனா தொற்று அதிகரிக்கும் என எச்சரித்தார். மேலும் இதுதொடர்பாக பின்வரும் அறிக்கை ஒன்றும் வெளியிடப்பட்டுள்ளது.

கொரோனாவுக்கு மாட்டு சாணம் தெரபி: பிரதமர் மோடியின் சொந்த மாநிலத்தில் நிகழும் அவலம்