நாச்சியார் படத்தை தொடர்ந்து நடிகை ஜோதிகா தற்போது ராதா மோகன் இயக்கத்தில் ‘காற்றின் மொழி’ படத்தில் நடித்து வருகிறார். ஹிந்தியில் வெளியாகி வெற்றிப் பெற்ற தும்ஹாரி சுலு படத்தின் தமிழ் ரீமக் இது.

இப்படத்தின் போஸ்டர் சுதந்திர தினத்தை முன்னிட்டு நேற்று வெளியானது. அதில் பெண்கள் சுயமாக சம்பாதித்து, தங்கள் வாழ்க்கையை தங்களுக்கு பிடித்த படி வாழ வேண்டும் என்ற கருத்தை வலியுறுத்தி, பெண்களுக்கான 10 கட்டளைகள் என்று ஜோதிகா இரண்டு கைகளிலும் ஏந்தியபடி ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.

அதில் குறிப்பிட்டு இருந்த பெண்களுக்கான 10 கட்டளைகள் :

1. உன் விருப்பம் போல் உடை உடுத்துவாயாக.

2. பசித்தால் முதலில் நீயே சாப்பிடுவாயாக.

3. உன் கணவன் உன்னை ஒரு கன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்தை காட்டாதிருப்பாயாக.

4. நீ விரும்புவதை செய்வாயாக.

5. குண்டாய் இருக்க விரும்பினால் குண்டாய் இருப்பாயாக.

6. வீட்டு பணிகளில் உன் கணவனையும் பங்கெடுக்க செய்வாயாக.

7. நீ சம்பாதித்து, உன் விருப்பம் போல் செலவு செய்வாயாக.

8. நீ விரும்பாதபோது, வற்புறுத்தலுக்குச் சம்மதியாமல் இருப்பாயாக.

9. மனதில் பட்டத்தை சொல்வாயாக.

10. ஆணும் பெண்ணும் சரிசமம் என்பதை அறிவாயாக.

இப்படம் வரும் அக்டோபர் 18ஆம் தேதி திரைக்கு வரும் என தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்து ஜோதிகா கூறுகையில், “காற்றின் மொழி எனக்கு மிகவும் பிடித்தபடங்களில் ஒன்றாகிவிட்டது. பெண்கள் சுயமாக சம்பாதித்து, தங்கள் வாழ்க்கையை தங்களுக்கு பிடித்தபடி வாழவேண்டும் என்ற கருத்தை வலியுறுத்துகிற படம் இது. பெண்களின் மேம்பாட்டிற்கு வழிகாட்டும் 10 கட்டளைகள் கொண்ட போஸ்டர் எனக்கு மிகவும் பிடித்திருந்தது” என்றார்.