ஆசியாவிலேயே மிகப்பெரிய சிறைச்சாலை என்ற தகுதியுடன் 2006-ம் ஆண்டு அன்றைய தமிழக முதல்வர் கருணாநிதியால் திறக்கப்பட்ட புழல் மத்திய சிறைச்சாலையும் இதற்கு விலக்கல்ல. நவீன வசதிகளுடன் 221 ஏக்கர் பரப்பளவில், 300-க்கும் குறையாத தண்டனைக் கைதிகள், 2,003 விசாரணைக் கைதிகள், 150 பெண் கைதிகள் என மூன்றுவிதமான கைதிகளுக்கும் தனித்தனியான சிறைகளுடன் ஒரே நேரத்தில் 3,000 கைதிகளை அடைக்கும் வசதி இங்கு உள்ளது.

30 அடி உயரம் கொண்ட புழல்சிறை சுவரின்மீது ஒன்றரை அடி உயரத்துக்கு மின் வேலியும் உண்டு. சிறை வளாகத்தைச் சுற்றி 15 கண்காணிப்புக் கேமராக்களுடன், கண்காணிப்புக் கோபுரங்களும் இருக்கின்றன. புழல் சிறை வளாகத்தில் விசாரணைக்கைதிகள், தண்டனைக் கைதிகள், பெண்கள் சிறை என மூன்றுக்கும் தனித்தனி அதிகாரிகள், தனித்தனி நிர்வாகம் என செயல்படுகிறது.

ஒவ்வொரு பிளாக்குக்கும் 3 முதல் 4 காவலர்கள்வரை பாரா பார்ப்பார்கள். 24 மணிநேரமும் இது நடக்கும். பொதுவாக மற்ற பிளாக்குகளுக்கு வார்டனும் ஹெட் வார்டனும் பொறுப்பாக இருப்பர். ஆனால் உயர் பாதுகாப்பு பகுதிக்கு ஹெட் வார்டனுக்கு மேல் அசிஸ்டென்ட் ஜெயிலர், டெபுடி ஜெயிலர் இருப்பார்கள். இவர்களுக்கு மேல் ஜெயிலர் இருப்பார்.

இத்தனை பாதுகாப்பையும் பார்த்துவிட்டுத்தான் அசம்பாவிதங்களும் இங்கே சாதாரணமாக நடக்கின்றன.

கடந்த் மே மாதத்தில் புழல் சிறையில் உள்ள கைதி ஒருவருக்கு சொகுசு வசதிகள் செய்து தர பணம் பெற்றதாக வந்த புகாரையடுத்து லஞ்ச ஒழிப்பு துறையினர் புழல் சிறையின் தலைமை காவலர் பிச்சையாவை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்த வழக்கில் இரண்டாவது குற்றவாளியான ஜெயிலர் ஜெயராமனை லஞ்ச புகாரின் அடிப்படையில் மதுரை மத்திய சிறைக்கு மாற்றப்பட்டார். இந்த நிலையில், இது தொடர்பாக சிறைத்துறை டிஐஜி முருகேசன் விசாரணை நடத்தி வந்தார். இதில் மேலும் இருவர் லஞ்சம் பெறும் வீடியோ சமூக வளைத்தளங்களில் வைரலாக பரவி வந்தது. இதனையடுத்து, இருவரையும் பணியிடை நீக்கம் செய்ய டிஐஜி பரிந்துரை செய்தார். இதையடுத்து புழல் சிறையின் முதன்மை தலைமை காவலர் சேகரை பணியிடை நீக்கம் செய்து சிறைத்துறை கண்காணிப்பாளர் செந்தாமரை கண்ணன் நடவடிக்கை எடுத்துள்ளார். அதே போல, அப்போது புழல் சிறையில் பணியாற்றிய முதன்மை தலைமை காவலர் வேலுச்சாமி, தற்போது பாளையங்கோட்டை சிறையில் பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் அவரையும் பணியிடை நீக்கம் செய்து பாளையங்கோட்டை சிறை கண்காணிப்பாளர் கிருஷ்ணகுமார் நடவடிக்கை எடுத்துள்ளார்.

இப்போது இந்நிலையில், கஞ்சா, சிகரெட், உணவு வகைகள் இங்குள்ள கைதிகளுக்கு தாராளமாக கிடைப்பதாகவும், சிறையில் சிலரின் ஒத்துழைப்போடு செல்போன்களை பயன்படுத்தி வருவதாகவும் புகார் எழுந்தன. மேலும், கைதிகள் பலவண்ண உடைகளில் சொகுசாக இருப்பது போன்ற புகைப்படங்களும் சமூக வலைதளங்களில் வெளியானது.

இதையடுத்து, சிறைத்துறை தலைவர் அசுதோஷ் சுக்லா திடீரென ஆய்வு மேற்கொண்டார். அப்போது, அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த சிறை அதிகாரிகள், வார்டன்கள், கைதிகளிடமும் விசாரணை நடத்தினார். சிறைக்குள் சட்ட விரோத நடவடிக்கைகள் நடந்தால் சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

தற்போது சமூக வலைதளங்களில் வெளியான புகைப்படங்கள் ஒரு மாதத்திற்கு முன்பு எடுக்கப்பட்டவை எனவும், ஏ பிரிவு கைதிகளுக்கு சில வசதிகள் அளிக்கப்படுவது வழக்கமானது என்றும் தெரிவித்தார். எனினும், 7 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது தொடர்பாக விசாரணை நடத்தி வருவதாகவும் அசுதோஷ் சுக்லா கூறினார்.

Tamil Nadu Congress Committee (TNCC) President E V K S Elangovan with leaders along to meeting Rahul Gandhi Residence in New Delhi on Wednesday. Express Photo by Amit Mehra. 20.01.2016.

இந்த நேரத்தில் ரபேல் போர் விமானம் வாங்கியதில் ஊழல் நடந்துள்ளதை கண்டித்து காங்கிரஸ் சார்பில் தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டமும், பேரணியும் இன்று நடந்தது.அதன்படி ஈரோடு காங்கிரஸ் சார்பில் சம்பத் நகர்-நசியனூர் ரோடு பிரிவில் பேரணி தொடங்கி கலெக்டர் அலுவலகத்தை அடைந்தது. முன்னதாக ஆர்ப்பாட்டம் செய்தனர். பிறகு கலெக்டர் கதிரவனை சந்தித்து மனு கொடுத்தார். இதில் பங்கேற்ற மாநில முன்னாள் காங்கிரஸ் தலைவர் மத்திய அமைச்சர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர் போர் விமானம் காங்கிரஸ் ஆட்சியின் போது வெறும் 520 கோடி ரூபாயில் வாங்க முடிவு செய்யப்பட்டது. ஆனால் தற்போது மோடி தலைமையிலான மத்திய அரசு இந்த போர் விமானங்களை 1500 கோடி ரூபாய் மதிப்பில் வாங்க முடிவு செய்துள்ளது. கிட்டத்தட்ட 1100 கோடி ரூபாய்க்கு முறைகேடு நடந்துள்ளது. அந்த பணத்தை லஞ்சமாக பெற வாய்ப்புள்ளது.இது குறித்து ராணுவ மந்திரி நிர்மலா சீதாராமன் இந்த போர் விமானங்கள் விலை பற்றி கேட்டால் மழுப்பி வருகிறார். ராணுவம் ரகசியம். இதை வெளியே சொல்ல முடியாது என்கிறார்.விலையை கூறுவதில் தவறு ஏதும் இல்லை. என்ன ஆயுதம்? என்ன குண்டு தயாரிக்கிறார்கள்? என்று கேட்டால்தான் ராணுவ ரகசியம் என் கிறார் என்ற பதில் அளித்த போது புழல் சிறையில் கைதிகளுக்கு நிறைய வசதிகள் செய்து கொடுத்தது போல படங்கள் வெளியானது. அது ஏன் என்ற கேள்விக்கு..

மிக விரைவில் முதல்வரும், துணை முதல்வரும் சிறைக்கு செல்ல இருப்பதால் இது போன்ற சலுகை ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது என்ற போது அங்குள்ள் நிருபர்கள் அதை கேட்டு சிரித்தவாறு சென்றனர்.