‘இந்தியன் 2’ படத்துக்கு முன்பே ‘தேவர் மகன் 2’ படத்தை முடிக்கவுள்ளதாக கூறி, இயக்குனர் ஷங்கருக்கு பேரதிர்ச்சியை தந்துள்ளார் நடிகர் கமல்ஹாசன் என்று தகவல்கள் வெளிவந்துள்ளன.

இசைஞானி இளையராஜா இசையில், இயக்குனர் பரதன் இயக்கத்தில் நடிகர் சிவாஜி கணேஷன், கமல்ஹாசன், நாசர், வடிவேலு, கவுதமி, ரேவதி ஆகியோர் நடிப்பில் 1992ல் வெளியான படம் தேவர் மகன். இப்படம் மிகப்பெரிய வெற்றிப் பெற்றது. மேலும் இப்படம் வெளியாகி தற்போது 26 ஆண்டுகள் ஆகிவிட்டது. இந்நிலையில் நடிகர் கமல்ஹாசன் இப்படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிக்க உள்ளார்.

கமல்ஹாசன் இந்தியன் 2 படத்திற்குப் பிறகு தேவர் மகன் 2 படத்தில் நடிக்க உள்ளார் என்று கூறப்பட்டது. ஆனால் தற்போது, இந்தியன் 2 படத்தில் மேக்கப் பிரச்னை மற்றும் பட்ஜெட் பிரச்சினை ஏற்பட்டதால் அப்படம் தாமதமாகிறது.

இதனால் இந்தியன் 2 படத்துக்கு முன்பே தேவர்மகன் 2 படத்தை எடுத்துவிடலாம் என்று முடிவெடுத்துள்ளார் கமல். இது தொடர்பாக தயாரிப்பு நிறுவனத்திடமும் பேசியிருக்கிறார். அவர்களும் சம்மதம் சொல்லிவிட்டதாகக் கூறப்படுகிறது. எனவே கமல் இப்போது மீசையை பெரிதாக வளர்க்கிறாராம். இந்தத் தகவலை அறிந்த இயக்குனர் ஷங்கர் பேர்ரதிர்ச்சியில் இருப்பதாக திரையுலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.