ஆட்டுக்கறிதான் என்று சென்னை கால்நடை மருத்துவக்கல்லூரி இறைச்சி அறிவியல்துறை ஆய்வறிக்கை தெரிவித்தாலும் ஆட்டுக்கறியை மீன் என்று வெவ்வேறு பெயர்களிலும் சட்டத்துக்குப் புறம்பாக இறக்குமதி செய்த ஜெய்சங்கர், கறி கணேஷ் ஆகியோரை அதிரடியாக கைதுசெய்திருக்கிறது சென்னை எழும்பூர் ரயில்வே பாதுகாப்பு படை (ஆர்.பி.எஃப்).
 
மேலும், இவர்களுக்கு ஜோத்பூரிலிருந்து அனுப்பிய முன்னா குரேஷ் உள்ளிட்டவர்களையும் கைது செய்து விசாரிக்க விரைந்துள்ளனர் ஆர்.பி.எஃப். போலிஸார்.
 
இராஜஸ்தான் மாநிலம் முகம்மது ரம்ஸானின் மகனான முன்னா குரேஷி… வியோபரி மொஹல்லா, கோரா பஸ், மக்ரானா நாகோர் என்னும் இடத்தில் வசித்துவருகிறார்.
 
கறிக்கடை வைத்திருக்கும் முன்னா குரேஷி கால்நடை மருத்துவர்களின் சான்றிதழோ அரசாங்கத்தின் அனுமதியோ பெறாமல் இறைச்சி சப்ளை செய்வதும் தெரியவந்துள்ளது.
 
இதுகுறித்து, எழும்பூர் ஆர்.பி.எஃப். இன்ஸ்பெக்டர் மோகனிடம் கேட்டபோது, “ஆட்டுக்கறி என்பதற்கு பதில் மீன் என்று தவறான பெயரில் இறக்குமதி செய்ததால்… 163 ரயில்வே சட்டப்பிரிவின்படி ஜெயசங்கர் மற்றும் கணேஷை கைது செய்து நீதிமன்றத்தில் ஒப்படைத்துள்ளோம்.
 
மேலும், ஜோத்பூரிலிருந்து இவர்களுக்கு மீன் பெயரில் பார்சல் அனுப்பியது யார்  என்பது குறித்து விசாரிக்க ஜோத்பூர் மாநிலத்திற்கு தனிப்படை விரைந்துள்ளது” என்றார் .
 
மேலும் இராஜஸ்தானிலிருந்து சென்னையைப்போல் வேறு எந்தெந்த மாவட்டத்தில் யார் யார் இறக்குமதி செய்தார்கள் என்பதையும் தோண்டி துருவிக்கொண்டிருக்கிறது ரயில்வே போலீஸ்.