இந்தியாவிலே அதிக மருத்துவ கட்டமைப்பு கொண்ட தமிழ்நாட்டில் தேவையில்லாமல் 15% மருத்துவ இடங்களை பிற மானிலங்களுக்கு அள்ளி தந்து கொண்டு இருக்கும் நாம்..

உச்ச நீதிமன்றம் டெல்லியில் இருப்பதால் பல முக்கிய வழக்குகளில் தேவையில்லாத செலவு மற்றும் காலவிரயமும் மொத்த திராவிட தென் இந்தியாவுக்கு ஏற்படுவதை கண்ணுறும் நாம்..

இந்த இரண்டு பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் விதமாக இரு தனி நபர் மாசோதவை பாராளுமன்றத்தில் எம்பி ஒருவர் செய்துள்ளதை கண்டு பெருமைபட காரணம் உள்ளது.. அது என்ன முக்கிய இரு பிர்ச்சனைகள் என்று நோக்க்கினால்..

இந்திய அரசமைப்புச் சட்டத்தின் பிரிவு -130ல் திருத்தங்கள் மேற்கொண்டு, மண்டல அளவில் புதுடெல்லி, சென்னை, மும்பை மற்றும் கொல்கத்தா ஆகிய இடங்களில் உச்சநீதிமன்றத்தின் கிளைகளை நிறுவ வேண்டும் என்பதும்..

மாணவர்களின் தகுதியை மதிப்பிட எந்த வகையிலும் உதவாத #நீட் மற்றும் #நெக்ஸ்ட் தேர்வுகளை.. மாணவர்களின் மருத்துவக் கனவை சிதைத்து பயிற்சி என்கிற பெயரில் இலட்சங்களில் பணத்தினை பறித்தும், தேர்வுகளில் ஆள்மாறாட்டம் போன்ற தவறுகளுக்கு விதையாகவும் விளங்கி வரும் #NEET மற்றும் #NEXT தேர்வுகளை, ரத்து செய்ய வேண்டும் என்பதும்..

ஆக இந்த இரு பிர்ச்சனைகள் தீர்வு வேண்டும் தனி நபர் மசோதாக்களை நடப்பு குளிர்கால கூட்டத் தொடரில் தற்போதய தமிழ்நாட்டின் எம்பி கொண்டு வந்துள்ளார்..

2014- 2019 கால கட்டத்தில் 37 லோக் சபா எம்.பி.க்கள் மற்றும் 13 ராஜ்ய சபா எம்.பி.களை வைத்திருந்த #அதிமுக எந்த ஒரு தனி நபர் மசோதாவையும் தமிழ்நாட்டின் நலனுக்குகாக தாக்கல் செய்ததாக ஆதாரம் இருந்தால் யாராவது சுட்டி கட்டலாம்..

அதுபோல #பாமக Anbumani Ramadoss பாராளுமன்ற உறுப்பினர் ஏன் அங்கு செல்லாமல் மிக குறைந்த வருகைப் பதிவை ஏன் வைத்துள்ளார் என்பதன் காரணத்தையும் யாராவது சுட்டி கட்டலாம்..

தற்போது பல எம்.பி.க்கள் திரைபடத்தில் மரத்தை சுற்றி வந்து டூயட் பாடும் சினிமா கதாநாயகன் கதாநாயகி போல பாராளுமன்றம் சுற்றி வந்து செல்பிக்களை போட்டு வருகின்றனர்..

எப்படி யோசித்து பார்த்தாலும் இதனால் என்ன நன்மை தமிழ்நாட்டுக்கு என நம் போன்ற மரமண்டைகளுக்கு ஏறும் வகையில் பாராளுமன்ற செல்ப்பிக்களின் நன்மைகளையும் யாராவது சுட்டி கட்டலாம்..

நாடாளுமன்றத்து எம்.பி பதவி என்பது அதி முக்கியமானது இதில் திறமையாக பணி செய்வது தமிழ்நாட்டுக்கு நல்லதை கொண்டு வரும் என்பது மட்டும் அல்ல, தமிழ்நாட்டின் மாண்பினை அது உயர்த்தவும் செய்யும்..

சிறப்பாக தங்களில் எம்.பி பதவி காலத்தில் நாடாளுமன்றத்தில் பணிபுரிந்த வரிசையில் பலர் உள்ளனர் அதில் முக்கியமானவர்கள்.. முக்கியமானவர்கள் எனற அளவிட்டின் காரணம் இவர்கள் பாராளுமன்றத்தில் செய்த செய்கைகளால் பேசிய பேச்சுகளால் தமிழ்நாட்டின் மீது ஒரு நல்ல பிம்பத்தை அகில இந்திய அளவில் கட்டமைத்தார்கள்..

திமுக நிறுவனர் #அண்ணா, நாஞ்சில் மனோக்ரன், முரசொலி மாறன், வைகோ, திருச்சி சிவா, காவேரி பிரச்சனைக்காக தனது மந்திரி பதவிலை ராஜினாமா செய்த வாழப்பாடி ராமமூர்த்தி, இந்திய அயறுறவு துறையில் வேலை பார்த்து பின் அரசியலுக்கு வந்த மணி சங்கர் இப்படி பலரை குறிப்பிடலாம்..

அப்படி அந்த வரிசையில் தமிழ்நாட்டு மாண்பை தனிநபர் மசோதக்களை தாக்கல் செய்ததன் மூலம்.. அதுவும் மிக முக்கிய இரு பிரச்சனையை கையில் எடுத்த #திமுக எம்பி வில்சன் புஷ்பநாதன் அவர்களுக்கும் நம் சார்பில் வாழ்த்துகள்..