தமிழ் திரையுலகில் ‘காதல் கவிதை’ படத்தில் படத்தின் மூலம் அறிமுகமான நடிகை இஷா கோபிகர், தற்போது பாரதிய ஜனதா கட்சியில் இணைந்துள்ளார்.

‘சந்திரலேகா’ என்ற தெலுங்கு படத்தின் அறிமுகமானவர் நடிகை இஷா கோபிகர். இவர் தமிழில் பிரசாந்த்துக்கு ஜோடியாக காதல் கவிதை படத்தின் மூலம் அறிமுகமானார். அதையடுத்து என் சுவாசக்காற்றே, நெஞ்சினிலே, ஜோடி, நரசிம்மா ஆகிய படங்களில் நடித்துள்ளார்.

பாலிவுட் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகையாக பெயரெடுத்தார் இஷா கோபிகர். இதுதவிர, மராத்தி, கன்னடா, தெலுங்கு ஆகிய மொழி படங்களிலும் நடித்துள்ளார். தற்போது நடிகை இஷா கோபிகர், சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் எஸ்.கே.14 படத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில், மகராஷ்டிரம் மாநிலத்தில் நேற்று நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் மத்திய சாலை போக்குவரத்து துறை மந்திரி நிதின் கட்காரி முன்னிலையில் இஷா கோபிகர் பாரதிய ஜனதா கட்சியில் இணைந்துள்ளார். பிரதமர் மோடி, சமீபகாலமாக தொடர்ந்து திரை பிரபலங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து சந்தித்து வருவது குறிப்பிடத்தக்கது.