பாகிஸ்தான் பஞ்சாப் மாகாணத்தின் சியால்கோட்டில் உள்ள ஆயிரம் வருட பழமையான இந்து கோவில் 72 வருடத்திற்குப் பிறகு மீண்டும் திறக்கப்பட்டது.

பாகிஸ்தானின் சியால்கோட் தாரோவாலில் 1000 வருட பழமையான ஷவாலா தேஜா சிங் கோவில் உள்ளது. இது சர்தார் தேஜா சிங் என்பவரால் கட்டப்பட்டது.

இந்த கோவில் இந்தியா – பாகிஸ்தான் பிரிவினையின் போது மூடப்பட்டது. 1992-ல் பாபர் மசூதி இடிப்பின்போது பாகிஸ்தானில் கொந்தளிப்பு ஏற்பட்டது.

அப்போது நிகழ்ந்த கலவரத்தில் இக்கோவில் தாக்கப்பட்டது. அதன் பிறகு சியால்கோட்டில் உள்ள இந்துக்கள் இக்கோவிலுக்கு செல்வதை தவிர்த்துவிட்டனர்.

தற்போது பிரதமர் இம்ரான்கானின் முயற்சியால் மீண்டும் இக்கோவில் பராமரிப்பு பணிகள் தொடங்கி விரைவில் திறக்கப்படவுள்ளது.

அதை சரிசெய்யும் பணி நடந்து கொண்டு வருகிறது. இந்த பணி விரைவில் முடிவடைய இருக்கிறது. இதற்கிடையே பக்தர்கள் வழிபடுவதற்காக 72 ஆண்டுகளுக்குப்பின் கோவில் மீண்டும் திறப்பட்டது.

கோவிலுக்கு அருகாமையில் வசித்து வரும் சுமார் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட இந்துக்கள் இதுவரை கோவிலில் தரிசனம் செய்துள்ளனர்.

விஷயம் கேள்விப்பட்டு தற்போது அதிகமானோர் வருகின்றனர். மேலும் இந்திய நாட்டின் பிற பகுதியில் உள்ள இந்துக்களும் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்றும் , மக்கள் எந்நேரமும் இக்கோவிலுக்கு வரலாம் என துணைஆணையர் பிலால்ஹைதர் தெரிவித்தார்
 
 
இதனால் பாகிஸ்தான் பகுதியில் வாழும் இந்துக்கள் இம்ரான்கானின் அரசிற்கு தங்கள் தங்கள் நன்றியை தெரிவித்துள்ளனர்.
 
 
இந்தியாவில் பார்மசூதியை இடித்துவிட்டு ராமர்கோவில் கட்டுவேன் என மோடியின் பாஜக அரசு பிடிவாதம் பிடித்துவரும் நிலையில் இம்ரான்கானின் பாகிஸ்தான் அரசின் செயல் நெகிழ்ச்சி தருவதாக பலரும் சமூகவலைதளத்தில் கருத்திட்டு வருகின்றனர்