நேபாளத்தில் ஆளும் கட்சிக்குள் அதிகார மோதல் உச்சகட்டத்தை அடைந்த நிலையில், பிரதமர் ஷர்மா ஒலியின் பரிந்துரைப்படி அந்த நாட்டு நாடாளுமன்றம் அதிரடியாக கலைக்கப்பட்டுள்ளது.

நேபாளத்தில் கம்யூனிஸ்ட் கட்சியும் மாவோயிஸ்ட் கட்சியும் இணைந்த நிலையில், 2018-ல் ஆளும் இடதுசாரி கட்சியின் பிரதமரானார் ஷர்மா ஒலி. இதன் துணைத் தலைவராக மாவோயிஸ்ட் கட்சி தலைவர் பிரசண்டா இருந்து வருகிறார்.

பிரதமர் ஷர்மா ஒலி அண்மையில் அந்த நாட்டு அரசியல் சாசனம் தொடர்பான அவசர சட்டம் ஒன்றை கொண்டு வந்தார். இது மிகப் பெரிய சர்ச்சையானது. இந்த அவசர சட்டம் தொடர்பாக ஆளும் இடதுசாரி கட்சிக்குள்ளும், ஷர்மா ஒலிக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதனால் கட்சி மட்டுமின்றி நாடாளுமன்றத்திலும் மெஜாரிட்டியை இழந்தார் பிரதமர் ஷர்மா ஒலி.

இந்நிலையில் காத்மாண்டுவில் இன்று (டிசம்பர் 20 ) பிரதமர் ஷர்மா ஒலி அமைச்சரவை கூட்டத்தை அவசரமாக கூட்டி, அதிருப்தி தலைவர்களை சமாதானம் செய்து ஆட்சியை தொடர்வதற்கு பதிலாக, நாடாளுமன்றத்தை கலைக்க முடிவு செய்து, இது தொடர்பாக ஜனாதிபதி பித்யா தேவி பண்டாரிக்கு பரிந்துரை கடிதமும் அனுப்பப்பட்டது.

மேலும் பிரதமர் ஷர்மா ஒலி, ஜனாதிபதி அலுவலகத்திற்கு நேரில் சென்று முடிவை தெரிவித்தார். பிரதமரின் பரிந்துரையை ஏற்று ஜனாதிபதி நாடாளுமன்றத்தை கலைத்து உத்தரவிட்டுள்ளார். 2021ம் ஆண்டு ஏப்ரல் 30 ஆம் தேதி முதல் மே 10 ஆம் தேதிக்குள் 2 கட்டங்களாக பொதுத்தேர்தல் நடத்தப்படும் என்று ஜனாதிபதி அறிவித்துள்ளார்.

மாட்டுச் சாணத்தால் தயாரிக்கப்பட்ட ‘வேதிக் பெயின்ட்’- மத்திய அமைச்சர் அறிவிப்பு