பிரதமர் மோடிக்கு எதிராக இளைஞர் தொலைக்காட்சியில் பேசிய வீடியோ பெரிய வைரல் ஆகி இணையம் முழுக்க இந்த வீடியோ பரபரப்பாகி வருவதால் பாஜகவினர் பதட்டத்தில் உள்ளதாக தகவல்கள் வந்த வண்ணம் உள்ளன
 
டிவிட்டரில் பாஜக வித்தியாசமான பிரச்சாரம் ஒன்றை செய்து வருகிறது. பிரதமர் மோடி உட்பட பாஜக தலைவர்கள் எல்லோரும் தங்கள் பெயருக்கு முன்னாள் காவலர் (chowkidar) என்ற வார்த்தையை சேர்த்துக் கொள்கிறார்கள்.
 
நாங்கள்தான் நாட்டின் காவலர் என்று கூறுவதற்காக இவர்கள் இப்படி பெயருக்கு முன் காவலர் என்பதை சேர்த்துக் கொள்கிறார்கள். இதுகுறித்து இளைஞர் ஒருவர் செய்த விமர்சனம் தான் இப்போது வைரலாகி உள்ளது.
 
தனியார் இந்தி தொலைக்காட்சி ஒன்றில் அந்த விவாதம் நடந்தது. அதில் சில பாஜக தலைவர்கள் கலந்து கொண்டனர். மக்கள் அவர்களிடம் கேள்வி கேட்பது போல இந்த விவாத நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இதில் மாணவர் ஒருவர் கேள்வி கேட்கும் நிகழ்வுதான் இப்போது வைரலாகி உள்ளது.
 
அப்படி என்ன தான் வைரலாகும் படி கேட்டார்.. அந்த மாணவர் பாஜக தலைவர்களை நோக்கி இந்தியில் பேசியதன் தமிழாக்கம் இதோ
 
பிரதமர் மோடி எங்களை பக்கோடா விற்க சொல்கிறார். அவரை அவரே ஊர்காவலர் (chowkidar) என்று சொல்லிக்கொள்கிறார்.
 
எங்களுக்கு காவலன்தான் வேண்டும் என்றால் நாங்கள் நேப்பாளில் இருந்து கூர்க்காவை வரவழைத்துக் கொள்வோம். அங்கு நிறைய கூர்க்காக்கள் இருக்கிறார்கள்.
 
ஆனால் எங்களுக்கு ஊர்காவலர் தேவை இல்லை. எங்களுக்கு தேவை ஒரு பிரதமர்தான். முன்னாள் ஆட்சி செய்தவர்கள் எல்லோரும் நாட்டை சீரழித்துவிட்டார்கள் என்று மோடி கூறுகிறார்.
 
ஆனால் அவர் பிறப்பதற்கு முன்னே பாபா அணு ஆராய்ச்சி நிலையம் உள்ளது.
 
மோடி வீட்டில் கோலி விளையாடும் போது பக்ரா நங்கல் அணை முன்னாள் ஆட்சியாளர்களால் கட்டப்பட்டது என்பதை அவர் மறக்க கூடாது, என்று அந்த இளைஞர் பேசி இருக்கிறார்.
 
மக்களின் குரலாக இவர் பேசுகிறார் என்று பலர் இதை ஷேர் செய்து வருகிறார்கள். பாஜகவினர் சிலர் இவரின் வீடியோவிற்கு ஆவேசத்துடன் பதில் அளித்தும் வருகிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது