நியூட்ரினோ திட்டத்துக்கு இடைக்கால தடை விதித்து தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. தேனி மாவட்டம் பொட்டிபுரம் அம்பரப்பர் மலையில் நியூட்ரினோ ஆய்வு மையம் அமைக்க கடந்த 2011ம் ஆண்டு மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சகம் அனுமதி வழங்கியது.

இதுதொடர்பான வழக்கை விசாரித்த பசுமை தீர்ப்பாயம் திட்டத்தினை தொடர அனுமதி மறுத்தது.இதையடுத்து கடந்த ஜனவரி மாதம் தமிழக அரசிடம் எந்த ஆலோசனையும் கேட்காமல் மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சகம் டாடா நிறுவனத்திற்கு நியூட்ரினோ மையத்தின் ஆய்வக பணிகளை தொடர அனுமதி வழங்கியது.

ஆனால் இதை கடுமையாக எதிர்த்த இயற்கை ஆர்வலர்கள் தொடர்ந்து எச்சரித்து வருகின்றனர்.அதில் அவர்கள் தெரிவித்த விவரமானது :

“சுமார் 2.5 கிமீ பரப்புக்கு சுரங்கங்கள் அமைக்கும் பணிகள் தற்போது தொடங்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த ஆய்வகத்தால் மேற்கு தொடர்ச்சி மலை பகுதியின் சுற்றுச்சூழல் அத்தனையும் அழியும்”

“மிகக் கடினமான பாறையில் சுரங்கம் தோண்டுவதற்கு, உயர்திறனுடைய வெடி மருந்துகளை அதிகளவில் பயன்படுத்த வேண்டும். மேலும் அதிலிருந்து சுமார் 6 லட்சம் கன மீட்டர் அளவுக்கு பாறைக் கழிவுகளை வெளியேற்ற வேண்டும்”

மேலும் பாஜக மோடி மத்திய அரசின் மற்றும் எடப்பாடி பழனிசாமி அதிமுக மாநில அரசின் முழு ஓத்துழைப்போடு நடக்கும் நியூட்ரினோ திட்டத்தை எதிர்த்து பூவுலகின் நண்பர்கள் நியூட்ரினோ திட்டத்துக்கு தடை கோரி தாக்கல் செய்தனர்.

அதில் அவரிகள் வைத்த முக்கிய அவர்கள் வைக்கும் முக்கிய வாதங்கள் பின் வருமாறு :

“சுரங்கம் அமையும் மலை தரைமட்டத்திலிருந்து 1,485 மீட்டர் உயரமுடையது. இவ்வளவு ஆழத்தில் சுரங்கம் தோண்டும்போது பாறையின் கீழ் நோக்கிய அழுத்தம், ஒரு சதுர மீட்டருக்கு 270 கிலோவுக்கும் அதிகமாக இருக்கும். இதனால் சுரங்கத்தின் உள்பகுதியில் பாறைவெடிப்பு மற்றும் உள்புற சுற்றுச்சுவரில் விரிசல் ஏற்படுதல் போன்ற பாதிப்புகளை உருவாக்கும். இந்த ஆபத்தைத் தவிர்ப்பதற்கான புவியியல் தொழில்நுட்ப அறிக்கை எதுவும் உங்கள் விண்ணப்பத்தில் இல்லை.”

“ஆய்வகம் அமைய உள்ள இடம், சர்வதேச அளவில் ‘பாதுகாக்கப்பட்ட பல்லுயிர் பெருக்க மண்டலமாக’ அறிவிக்கப்பட்டுள்ள மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் வருகிறது. மேலும் இம்மலைப் பகுதி அரிய வகை தாவரங்கள், பறவைகள், பாலூட்டிகள் மற்றும் வணிக முக்கியத்துவமுடைய மூலிகைகள் ஆகியவற்றின் புகலிடமாக விளங்குகிறது ”

“ஆய்வகத்திற்கு தேர்வு செய்யப்பட்டுள்ள இடம், அருகிலுள்ள வைகை அணையின் நீர்ர்பிடிப்புப் பகுதிகளில் ஒன்றாக உள்ளது. ஐந்து மாவட்ட மக்கள் குடிநீருக்காகவும், விவசாயப் பயன்பாட்டிற்காகவும் வைகை அணையின் நீரை நம்பி வாழ்கின்றனர்”

இந்த நிலையில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது மத்திய சுற்றுச்சூழல் துறையின் அனுமதிக்கு இடைக்கால தடை விதித்து தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.

மேலும் வனவிலங்கு வாரியத்தின் அனுமதி பெற்ற பிறகே திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்றும், இது தொடர்பாக வனவிலங்கு வாரியம் மீண்டும் ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவிட்டுள்ளது.

தேசிய பசுமை தீர்ப்பாயம் தந்த தடையை இயற்கை ஆர்வலர்கள் கொண்டாடி வருகின்றனர் .