‘கோலமாவு கோகிலா’ திரைப்படத்தில் யோகிபாபுவின் காதலை நயன்தாரா ஏற்றுக் கொள்வாரா என்ற சுவாராஷ்யம் ரசிகர்களிடையே காணப்பட்டது.

லைகா புரொடக்ஷன்ஸ் தயாரித்திருக்கும் கோலாமாவு கோகிலா படத்தை நெல்சன் இயக்கியிருக்கிறார். அனிருத் இசையமைத்துள்ளார்.

சமீப காலமாக ஹீரோயினுக்கு முக்கியத்துவம் தரும் படங்களில் நடித்து வரும் நயன்தாரா நடிப்பில் வெளியாகி உள்ள ‘கோலமாவு கோகிலா’ திரைப்படம், ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. இப்படத்தில், நயன்தாராவுடன் யோகி பாபு, சரண்யா பொன்வண்ணன், அறந்தாங்கி நிஷா மற்றும் ஜாக்குலின் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

கதை : சென்னையின் புறநகர் பகுதியில் வாழும் ஒரு மிடில் கிளாஸ் குடும்பத்தை சேர்ந்த இளம் பெண் கோகிலா. தந்தை சிவாஜி ஏடிஎம் காவலாளி. தாய் சரண்யா, கல்லூரி படிக்கும் தங்கை சோபி ஆகியோருடன், காசு பணம் பெரிதாய் இல்லையென்றாலும் நீதி, நேர்மையென வாழும் குடும்பம். இவர்களின் வீட்டிற்கு எதிரில் பலசரக்கு கடை நடத்தி வரும் யோகி பாபு, நயன்தாராவை ஒரு தலையாக காதலிக்கிறார்.

தாய் சரண்யாவுக்கு புற்று நோய் பாதிப்பு ஏற்படுகிறது. தாயை எப்படியாவது காப்பாற்ற வேண்டும் என போராடும் நயன்தாராவுக்கு போதை பொருள் கடத்தல் கும்பலுடன் லிங்க் கிடைக்கிறது. தாயின் சிகிச்சைக்கு பணம் கிடைக்கும் நேரத்தில், அந்த கும்பல் மூலம் நயன்தாராவுக்கு சிக்கல் ஏற்படுகிறது. அதில் இருந்து அவர் எப்படி மீண்டு வருகிறார், தாயை காப்பாற்ற முடிந்ததா என்பதை யோகி பாபு அண்ட் கோவின் காமெடி கலந்து சொல்லியிருக்கிறார் இயக்குநர்.

பெண் என்றாலே செக்ஸ்க்குகான பொருளாக தான் ஆண்கள் பார்ப்பார்கள் என்பதை பல இடங்களில் காட்சிப்படுதியிருக்கிறார். அதே நேரத்தில் அதை ஒரு பெண் எப்படி கையாள வேண்டும் என்பதையும் நயன்தாரா மூலம் சொல்லியிருக்கிறார். அறம் படத்திற்கு பிறகு நயன்தாராவுக்கு மிக முக்கியமான படம் கோலமாவு கோகிலா.

காமெடி, பேமிலி, திரில்லர் என எல்லா அம்சங்களையும் உள்ளடக்கியிருக்கிறது இந்த கோகோ.