புதுதில்லியை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் தொழிலாளர் மாநில காப்பீட்டுக் கழகத்தில் (Employees State Insurance Corporation) மாநிலங்கள் வாரியாக காலியாக உள்ள 771 மருத்துவ அதிகாரி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து வரும் நவ-10க்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி மற்றும் காலியிடங்கள்: Insurance Medical Officers – 771 (தமிழ்நாடு – 11 இடங்கள்)

சம்பளம்: மாதம் ரூ.53,100 – 1,67,800

வயதுவரம்பு: 10.11.2018 தேதிப்படி 30 வயதிற்குள் இருக்க வேண்டும். குறிப்பிட்ட பிரிவினருக்கு அதிகபட்ச வயது வரம்பில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது.

தகுதி: மருத்துவத்துறையில் எம்பிபிஎஸ் பட்டம் பெற்று, பயிற்சி முடித்து இந்திய மருத்துவ கவுன்சிலில் பதிவு செய்திருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.500. மற்ற அனைத்து பிரிவினரும் ரூ.250 கட்டணமாக ஆன்லைனில் செலுத்த வேண்டும்.

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 10.11.2018

விண்ணப்பிக்கும் முறை: தொழிலாளர் மாநில காப்பீட்டுக் கழகம் (Employees State Insurance Corporation)என்ற இணையதளத்தில் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

மேலும் தேர்வு பற்றி முழுமையான விவரங்கள் அறிய…