ஆன்லைனில் நீட் தேர்வு நடத்தப்படும் என்ற அறிவிப்பை மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை வாபஸ் பெற்றுள்ளது.

நாடுமுழுவதும் எம்.பி.பி.எஸ் மற்றும் பி.டி.எஸ் உள்ளிட்ட மருத்துவப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கையானது மத்திய அரசு கொண்டு வந்த நீட் தேர்வு மூலம் நடைபெற்று வருகிறது. இதுதொடர்பாக பல்வேறு சர்ச்சைகள் எழுந்தது.அதேசமயம் இந்த ஆண்டு முதல் நீட் தேர்வானது ஆன்லைன் முறையில் நடைபெறும் என்றும், ஆண்டுக்கு இருமுறை தேர்வுகள் நடத்தப்படும் என்றும் அறிவிப்பு வெளியானது. இதற்கும் பரவலாக எதிர்ப்புகள் எழுந்தது.

இந்நிலையில் ஆன்லைனில் நீட் தேர்வு நடத்தப்படும் என்ற அறிவிப்பை மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை தற்பொழுது வாபஸ் பெற்றுள்ளது.இதுதொடர்பாக மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘ஆன்லைனில் நீட் தேர்வு நடத்தப்படும் என்ற அறிவிப்பும், ஆண்டுக்கு இருமுறை தேர்வுகள் நடத்தப்படும் என்ற அறிவிப்பும் திரும்ப பெறப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது மட்டும் இல்லாமல் ஆண்டுக்கு இருமுறை நீட் தேர்வுகள் நடத்தப்படும் என்றும் அறிவிப்பிலும் பாஜக மோடியின் அரசு பல்டி அடித்து உள்ளது .,

இதனால் இனி ஒருமுறை மட்டுமே நீட் தேர்வு நடைபெறும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. ஆன்லைனில் நீட் தேர்வு நடைபெறும் என ஜூலை மாதம் வெளியிட்ட அறிவிப்பை மத்திய அரசு திரும்ப பெற்றது. கணினி முறைப்படி நீட் தேர்வு நடைபெறாது என்றும் தெரிவித்துள்ளது.

விடைத்தாள் மூலமாக மட்டுமே 2019 ம் ஆண்டு மே 15 தேதி நீட் தேர்வு நடைபெறும் என்று மத்திய அரசு கூறியுள்ளது. மருத்துவப் படிப்பில் சேருவதற்கான நீட் தேர்வு முடிவுகள் 2019 ம் ஜூன் 5 ம் வெளியிடப்படும் என்று மத்திய அரசு கூறியுள்ளது. சிபிஎஸ்இ-க்குப் பதிலாக இனி என்டிஏ நீர் தேர்வை நடத்தும் என்று தெரிவித்துள்ளது. 2018 நவம்பர் 1 முதல் 30 வரை நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் என்று மத்திய அரசு கூறியுள்ளது.