இன்று பெட்ரோல் விலை லிட்டருக்கு 14 காசுகள் அதிகரித்துள்ளது. சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.73.28 ஆக விற்பனையாகிறது
.
சர்வதேச கச்சா எண்ணெய் விலை நிலவரத்தை அடிப்படையாக கொண்டு இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணையித்து வருகின்றன.
 
பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்களே நிர்ணையித்துக்கொள்ள மத்திய அரசு அனுமதி அளித்துள்ளதால், சர்வதேச சந்தையின் தாக்கம் உடனடியாக இந்தியாவிலும் எதிரொலிக்கிறது.
 
தினந்தோறும் பெட்ரோல், டீசல் விலையை எண்ணைய் நிறுவனங்கள் நிர்ணையித்து வருகின்றன. கடந்த சில தினங்களாக ஏற்ற இறக்கமாக காணப்பட்டு வந்த பெட்ரோல், டீசல் விலை, 3-வது நாளாக இன்றும் விலை உயர்வை சந்தித்துள்ளது.
 
எண்ணெய் நிறுவனங்கள் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், சென்னையில் பெட்ரோல், நேற்றைய விலையில் இருந்து 14 காசு அதிகரித்து லிட்டருக்கு ரூ.73.28 ஆகவும், டீசல்,நேற்றைய விலையில் இருந்து 13 காசு அதிகரித்து லிட்டருக்கு ரூ.69.57 காசுகளாகவும் உள்ளது.