தமிழர்களை பொறுக்கிகள் என்றும் ஜல்லிக்கட்டுக்கு போராடிய தமிழக மாண்வர்களை எலிகள் என்று கிண்டல் அடித்து சிர்த்தவரும்,   சர்ச்சைகளுக்கு பெயர் பெற்ற ராஜிவ் காந்தி கொலை வழக்கில் ஜெயின் கமிஷனால் கண்டிக்கப்ப்ட்ட ஆர் எஸ் எஸ் கொள்கையாளர் பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி, அதிமுகவுடன் பாஜக கூட்டணி வைத்ததில் இருந்ததே அது குறித்து கடும் அதிருப்தியைத் தெரிவித்து வருகிறார்.
 
அதிமுக கூட்டணியில் பாஜக இடம்பெறாமல் 40 தொகுதிகளிலும் பாஜக தனித்து நின்றிருக்க வேண்டும்; அதிமுக தேர்தல் அறிக்கையை குப்பையில்தான் போட வேண்டும் போன்ற சர்ச்சை கருத்துகளைக் கூறி வந்தார்.
 
இந்நிலையில் ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர், ‘தமிழகத்தில் உள்ள அரசியல் நிலைமை குறித்து வீராட் இந்துஸ்தான் சங்க நிர்வாகிகளிடம் கலந்து ஆலோசித்ததாகவும், தமிழகத்தில் உள்ள தேசியவாதிகள் டிடிவி தினகரன் தலைமையிலான அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்துக்கு வாக்களிக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.
 
ஊழல் விவகாரத்தில் தமிழகத்தில் உள்ள அனைத்து கட்சிகளும் ஒன்றுதான் என விமர்சித்துள்ள சுப்பிரமணியன் சுவாமி, டிடிவி தினகரன் கட்சிக்கு தேசிய உணர்வு உள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
 
அதிமுக கூட்டணியில் உள்ள பாஜகவின் மூத்த தலைவர்களுள் ஒருவரான சுப்பிரமணியன் சுவாமி டிடிவி தினகரனுக்கு வாக்களியுங்கள் என வெளிப்படையாகத் தெரிவித்திருப்பது பிண்ணனியில் மோடி ஊள்ளாரா என சந்தேகம் வரப்பெற்று   அதிமுகவினரை மட்டுமின்றி பாஜகவினரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. 
 
அதே நேரத்தில் தமிழ்நாட்டில் உள்ள தேசியவாதிகள் டிடிவி. தினகரனை ஆதரிக்க வேண்டும் என்ற சுப்பிரமணியன் சுவாமியின் கருத்து பாஜகவைப் பாதிக்காது என்று அக்கட்சியின் மூத்த தலைவர் இல.கணேசன் கூறியுள்ளார்.
தேசியவாதிகள் டிடிவி. தினகரனை ஆதரிக்க வேண்டும் என்று சுப்பிரமணியன் சுவாமி கூறியிருப்பது அவரது சொந்தக் கருத்து. அவரது கருத்து பாஜகவை ஒருபோதும் பாதிக்காது என்றார்.