தேனாம்பேட்டையில் விடுமுறை தரவில்லை என வாக்கிடாக்கியில் புகார் தெரிவித்துவிட்டு சென்ற போக்குவரத்து முதல் நிலைக் காவலர் தர்மராஜை, போக்குவரத்து ஆய்வாளர் ரவிச்சந்திரன் துரத்திச் சென்று பிடித்தபோது, அவர் விபத்தில் சிக்கிய சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.
 
தேனாம்பேட்டை போக்குவரத்து காவல்நிலையத்தில் முதல் நிலை காவலராக பணியாற்றி வரும் தர்மராஜ் மறைந்த தனது தாய்க்கு திதி கொடுக்க கடந்த 19-ம் தேதி ஆய்வாளர் ரவிச்சந்திரனிடம் விடுப்பு மனு கொடுத்துள்ளார். ஆனால், விடுப்பு மனுவை நிராகரித்ததால் ஆய்வாளர் ரவிச்சந்திரனை செல்போனில் தொடர்பு கொண்டு தர்மராஜ் விடுப்பு கேட்டுள்ளார்.
 
ஆனால் விடுப்பு வழங்கப்படாத காரணத்தினால், கடந்த 21-ம் தேதி பணிக்கு வந்த காவலர் தர்மராஜ், தன்னுடைய வாக்கி டாக்கி மூலம் போக்குவரத்து காவல் கட்டுப்பாட்டு அறையைத் தொடர்பு கொண்டு விடுப்பு நிராகரிக்கப்படுவது குறித்து புகார் கூறியுள்ளார்.
 
இதனை தொடர்ந்து தர்மராஜ் போதையில் இருப்பதாக புகார் எழுந்ததால் அவரை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று பரிசோதனைக்கு உட்படுத்திய நிலையில் அவர், போதையில் இருந்தது உறுதியானதால் தர்மராஜ் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
 
இதையடுத்து தர்மராஜ் தனது இருசக்கரவாகனத்தில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்த போது அவரைப் பார்த்துவிட்ட காவல் ஆய்வாளர் ரவிச்சந்திரன், திடீரென தர்மராஜை நோக்கிச் சென்று அவரது இரு சக்கர வாகனத்தை நிறுத்தி பிடிக்க முற்பட்டார்.
இதன் காரணமாக தர்மராஜ் அங்கு வந்த சரக்கு ஆட்டோ மீது மோதி கீழே விழுந்தார். இதன் இடையே போலிசையே போலிஸ் தாக்கும் இந்த காட்சி வைரல் ஆகிஉள்ளது
போலிஸ் தீடிர் தாக்குதலில் காயம் அடைந்த போலிஸ்  தர்மராஜ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
 
சென்னையில் இருசக்கர வாகனத்தில் சென்ற காவலரை மடக்கிப்பிடித்த கொடூர போக்குவரத்து ஆய்வாளர் ரவிச்சந்திரன் ஆயுதப்படைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
நேற்று தான் தமிழ்நாடு முதல்வர் எடப்பாடி பழனிசாமி தமிழ்நாட்டு போலிஸ் ஸ்காட்லாண்ட் யார்ட் போலிஸுக்கு சமன் என்று புகழ்ந்த நிலையில்  இந்த சம்பவம் நடந்து உள்ளது  என்பது குறிப்பிடதக்கது