தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தில் காலியாக உள்ள சுற்றுச்சூழல் ஆய்வாளர், உதவி பொறியாளர், தட்டெழுத்தாளர், உதவியாளர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி மற்றும் காலியிடங்கள் : 224
1. சுற்றுச்சூழல் ஆய்வாளர் : 60
கல்வித் தகுதி: எம்.எஸ்.சி. உயிர்வேதியியல், எம்.எஸ்.சி வேதியியல், எம்.எஸ்.சி சூழல் அறிவியல், எம்.எஸ்.சி விலங்கியல்
சம்பளம்: மாதம் ரூ. 37,700 முதல் ரூ. 1,19,500

2. உதவி பொறியாளர் : 73
கல்வித் தகுதி: பி.இ சிவில் இன்ஜினியரிங், எம்.எஸ்.சி சூழல் அறிவியல், பி.டெக் கெமிக்கல் இன்ஜினியரிங்
சம்பளம்: மாதம் ரூ. 37,700 முதல் ரூ.1,19,500

3. தட்டெழுத்தாளர் : 55
கல்வித் தகுதி: ஏதேனும் ஓர் பாடப்பிரிவில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ. 19,500 முதல் ரூ.62,000 வரையில்

4. இளநிலை உதவியாளர் : 36
கல்வித் தகுதி: ஏதேனும் ஓர் பாடப்பிரிவில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ. 19,500 முதல் ரூ.62,000 வரையில்

வயது வரம்பு : 18 முதல் 35 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.

தேர்வு முறை : ஆன்லைன் தேர்வு, திறன் சோதனை மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பக் கட்டணம் : பொது மற்றும் ஓ.பி.சி. விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் ரூ.500, மற்ற அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் ரூ. 250

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி : 23.04.2019

விண்ணப்பிக்கும் முறை: தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் என்ற இணையதளத்தில் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.