தமிழ்நாட்டில் வறட்சியினால் கரும்பு விவசாயம் பாதிக்கப்பட்டிருப்பதால் சர்க்கரை உற்பத்திக்கான செலவு அதிகமாகி வருமானம் குறைந்துவிட்டது.

அதனால் வங்கியில் வாங்கிய கடனை திருப்பிச் செலுத்த கூடுதல் அவகாசம் வேண்டும்” எனத் தெரிவித்ததாக பிரதமர் மோடியை சந்தித்த பின்னர் தமிழ்நாடு சர்க்கரை ஆலை அதிபர் சங்கத்தினர் தெரிவித்தனர்

மேலும் மத்திய பாதுகாப்பு அமைச்சர் நிர்மலா சீதாராமன்தான் இந்த சந்திப்புக்கு ஏற்பாடு செய்தார் என்றும் அதன் பின்னரே, தமிழ்நாட்டைச் சேர்ந்த பா.ஜ.க. பிரமுகர்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது என்றும், அதிபர்கள் பிரதமருடனான சந்திப்பு சுமூகமாக இருந்தது என்றும் இது குறித்து கவனிப்பதாகச் பிரதமர் சொன்னார் என்றும் தெரிவித்தனர்.

இந்த கூட்டத்தில் பாஜக் துனைபொது செயலாளர் வானதி ஶ்ரீனிவாசன் மட்டும் இருந்தது தமிழக பாஜகவினரிடையே கொந்தளிப்பு எற்படுத்தி உள்ளது என பாஜக தகவலகள் தெரிவிக்கின்றன.

முன்னதாக தமிழக பத்திரிகையாளர்களை தீடிர் என மோடி சந்தித்ததும் அதில் துனைபொது செயலாளர் ராகவன் மட்டுமே கலந்து கொண்டது பொது செயலாளர் ராஜவை அதிரிச்சி அடைய வைத்துள்ளதாம்.

பிரமர் மோடி சந்திப்பை பத்திரிகையாளர்களை வெளியே சொல்லாத விஷ்யம் பூதகரமாகி பல்வேறு மீம்ஸ்களை சமூக வளைதளத்திலே தருவித்து வருகிறது.

இப்படி தனக்கு தெரியாமல் நடந்த இரு நிகழ்வுகளால் மாநில தலைவர் தமிழிசை நிலைகுலைந்து பெரும் அதிர்ச்சியில் உள்ளதாக அவருக்கு நெருக்கமான தகவலகள் உறுதிப்படுத்தி உள்ள.