தமிழகத்தில், மாவட்டங்களுக்கு இடையேயான பொது போக்குவரத்துக்கு செப்டம்பர் 7 ஆம் தேதி முதல் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் ரயில் போக்குவரத்தில் ஏற்கெனவே இயக்கப்பட்ட ஏழு சிறப்பு ரயில்கள் மற்றும் கூடுதலாக 6 சிறப்பு ரயில்களை இயக்க ரயில்வே நிா்வாகத்திடம் தமிழக அரசு கோரிக்கை வைத்தது. இதனை ஏற்று, கூடுதலாக, சென்னை சென்ட்ரல்-கோயம்புத்தூா், சென்னை சென்ட்ரல் -மேட்டுப்பாளையம்,

சென்னை-மதுரை, சென்னை -கன்னியாகுமரி, சென்னை-தூத்துக்குடி , சென்னை-செங்கோட்டை ஆகிய 6 சிறப்பு ரயில்கள் உள்பட 13 சிறப்பு ரயில்களை இயக்க ரயில்வே வாரியம் ஒப்புதல் அளித்தது.

இதனையடுத்து சென்னை உள்பட தமிழகத்தின் பல நகரங்களில் 13 சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ள நிலையில், இந்த ரயில்களின் பயணத்துக்கான டிக்கெட் முன்பதிவு இன்று (செப்டம்பர் 5) காலை 8 முதல் தொடங்கியுள்ளது.

தமிழகம் முழுவதும் உள்ள டிக்கெட் கவுன்டா்கள் மூலமாகவும், இணையவழி மூலமாகவும், டிக்கெட் முன்பதிவு தொடங்கியுள்ளது. கொரோனா முன்னெச்சரிக்கை விதிகளை பின்பற்றி ரயில் சேவை இயக்கப்பட உள்ளது. மேலும் முன்பதிவு செய்தவர்கள் தவிர யாரும் ரயில் நிலையத்திற்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் எனவும் ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

மேலும் வாசிக்க: பொது இடங்களில் மாஸ்க் அணியாவிட்டால் ரூ.200, எச்சில் துப்பினால் ரூ.500 அபராதம்- தமிழக அரசு