தமிழகத்தில் ஒரு நாள் பாதிப்பில் 7000ஐ எட்டிய கொரோனா தொற்று; பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 2,06,737 ஆக உயர்ந்துள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா தொற்று சமூக பரவலாக மாறிவிட்டதை உறுதிசெய்வதாக, கொரோனா அறிகுறியுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டவர்களுக்கு அடுத்தடுத்து நோய்த்தொற்று உறுதியாவதால் கடந்த சில நாட்களாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது.

சில தினங்கள் முன்பு வரை 5000 வரை இருந்த பாதிப்பு, கடந்த 3 நாட்களாக 6000-த்தை கடந்து, இன்று 7000 ஆக அதிகரித்துள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் இன்று (ஜூலை 25) கொரோனாவால் புதிதாக 6988 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதனால் எண்ணிக்கை 2,06,737 ஆக உயர்ந்துள்ளஹு எனக் கூறியுள்ளது.

தமிழகத்தில் கொரோனாவால் (ஜூலை 25) இன்று மேலும் 89 பேர் உயிரிழந்துள்ளதால், பலி எண்ணிக்கை 3,409- ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் மட்டும் 1,329 பேர் கொரோனானால் பாதிக்கப்பட்டு, மொத்தம் 93,537 -ஐ கடந்துள்ளது. பிற மாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு வந்த 51 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

மேலும் வாசிக்க: தமிழகத்தில் 2 லட்சத்தை எட்டிய கொரோனா பாதிப்பு; கட்டுப்படுத்த தவறுகிறதா தமிழக அரசு..

இதுவரை தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் 1,25,553 ஆண்கள், 81.161 பெண்கள், 23 திருநங்கைக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனாவில் இருந்து இதுவரை 1,51,055 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீடு திரும்பியுள்ளனர்.

இந்தியாவிலேயே அதிகபட்சமாக தமிழகத்தில் மொத்தம் 115 மையங்களில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. தற்போது 52,273 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்று தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.