பெலிஜியம் நாட்டு பிரபல இயக்குனர் ஜெரோம் சாலே தன்னுடைய லார்கொ விந்‌ச் படத்தை காப்பியயடித்து சாஹோ படம் எடுக்கப்பட்டுள்ளதாக குற்றஞ்சாட்டியுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

தெலுங்கு சினிமாவில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் பிரபாஸ் நடிப்பில் வெளியாகியுள்ள சாஹோ திரைப்படம் பல்வேறு விமர்சனங்களிடையில் நல்ல வசூல் ஈட்டி வருவதாகக் கூறப்படுகிறது. ஆனால் விமர்சன ரீதியாக கடும் சரிவை சந்தித்துள்ளது.

தற்போது இவர் சுஜீத் இயக்கத்தில் சாஹோ என்ற படத்தில் நடித்துள்ளார். அவருடன் ஸ்ரத்தா கபூர், அருண் விஜய், நீல் நிதின் முகேஷ், ஜாக்கி ஷெராப் மற்றும் பலர் நடித்துள்ளனர். மிகப் பிரம்மாண்டமான ஆக்ஷன் படமாக உருவாகியுள்ள இப்படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் ஆகிய மொழிகளில் கடந்த வெள்ளியன்று வெளியானது.

இந்நிலையில் பெல்ஜியம் நாட்டைச் சேர்ந்த பிரபல இயக்குனர் ஜெரோம் சாலே தன் படத்தை காப்பியடித்தே “சாஹோ” எடுக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார். இது பற்றி தன் சமூக வலைத்தளபக்கத்தில் கூறியுள்ளது, “இன்னொரு முறையும் என் படம் இலவசமாக காப்பியடிக்கப்பட்டு தெலுங்கில் எடுக்கப்பட்டிருப்பதாக தெரிகிறது. இதுவும் முதல் படத்தைப் போலவே மோசமான படமாக அமைந்துள்ளது. தெலுங்கு இயக்குனர்களே என் படைப்பை திருடுவதாக இருந்தால் அதை முறையாக எடுங்கள்” என்று கூறியுள்ளார்.

இது சினிமா உலகில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. லார்கொ விந்‌ச் படத்தில் உள்ள பல காட்சிகள் சாஹோ படத்தில் அப்படியே வைக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. மேலும் கடந்த வருடம் பவன் கல்யாண் நடிப்பில் வெளியான அங்கயத்தவசி படமும் இப்படத்தின் காப்பியே எனக் கூறப்படுகிறது.