மத்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான டிராய் டி.டி.ஹெச். மற்றும் கேபிள் பயனர்கள் அவரவர் விரும்பிய சேனல்களை தேர்வு செய்ய  புதிய செயலியை வெளியிட்டுள்ளது.
 
டிராய் அறிமுகம் செய்துள்ள இந்த புதிய செயலியில் ஐந்து வழிமுறைகளை கடந்து, அவரவர் விரும்பும் சேனல்களை தேர்வு  செய்து கொள்ளலாம்.
 
இந்த சேவையை கொண்டு விரும்பிய சேனல்களை தேர்வு செய்வதோடு அவற்றுக்கான கட்டணங்களையும் அறிந்து கொள்ள முடியும்  என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
அதில், வாடிக்கையாளர்கள் தங்களது பெயர், வசிக்கும் மாநிலம், விரும்பும் சேனல் வகை அதன் பின் திரையில் சேனல்கள் பட்டியலிடப்பட்டு இருக்கும்.
 
பயனர்கள்  அவரவர் விரும்பும் சேனல்களை தேர்வு செய்து மாதாந்திர கட்டணத்தை நிர்ணயித்துக் கொள்ளலாம். விரும்பிய சேனல்களை தேர்வு செய்த பின் அதற்கான  கட்டணத்தில் இலவச சேனல்கள், கட்டண சேனல்கள், கட்டண சேனல்களுக்கு நீங்கள் செலுத்தும் கட்டணம், ஜி.எஸ்.டி. வரி மற்றும் டி.டி.ஹெச். சேவை வழங்கும்  நிறுவனத்திற்கு நீங்கள் செலுத்த வேண்டிய நெட்வொர்க் கட்டணம் உள்ளிட்டவை தனித்தனியே பட்டியலிடப்பட்டிருக்கும்.
 
இவற்றின் கீழ் மொத்தமாக மாதாந்திர  அடிப்படையில் நீங்கள் செலுத்த வேண்டிய தொகை இடம்பெற்றிருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
புதிய விதிமுறையின் படி இலவச சேனல்களை கட்டாயம் வாங்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. சேனல் செலக்டர் வலைதளத்தில் ஹெச்.டி. மற்றும் எஸ்.டி.  சேனல்களை, சேனல் வகைகள், ஒளிபரப்பும் நிறுவனம் மற்றும் மொழி உள்ளிட்டவற்றை தேர்வு செய்யலாம் என்றும் புதிய விதிமுறைகளின் படி இலவச  சேனல்களுக்கான கட்டணம் ரூ.130 (வரி உள்ளிட்டவற்றை சேர்த்து ரூ.153.40) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
 
இதைத் தொடர்ந்து வாடிக்கையளர்கள் தேர்வு  செய்யும் சேனல்களுக்கு தனியே கட்டணம் செலுத்த வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. 
*