நக்கீரன் கோபால் கைது செய்யப்பட்டதற்கு அனைத்து அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில் , இவ்விகாரத்தில் காவல்துறையின் நடவடிக்கை சரியே என அமமுக துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கூறி ஆச்சிரியத்தை எற்படுத்தி உள்ளார்

மேலும் மகிழ்ச்சியுடன் நக்கீரன் கோபால் கைது செய்யப்பட்டதை தாம் வரவேற்பதாக அம்மா மக்கள் முன்னேற்ற கழகப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

நக்கீரன் இதழலில் பாஜக வுடன் டிடிவி தினகரன் நெருக்கம் காட்டுவதை ஆதாரத்துடன் வெளியிட்டு இருந்த நிலையில் , பத்திரிக்கையாளர்கள் தங்களது பொறுப்புணர்ந்து செயல்பட வேண்டும் என்று கூறிய அவர், கடந்த 1996ம் ஆண்டு என் மீது அவதூறு செய்தி வெளியிட்ட நக்கீரன் கோபாலுக்கு 6 மாதம் சிறைத் தண்டனை பெற்று கொடுத்தேன் என்று பெருமையுடன் கூறினார்.

முன்னதாக சென்னை விமான நிலையத்தில் நக்கீரன் கோபால் இன்று காலை கைது செய்யப்பட்டிருந்தார். பின்னர் நக்கீரன் கோபாலை ஐபிசி 124-வது பிரிவின் கீழ் கைது செய்தது செல்லாது என சென்னை எழும்பூர் அல்லிக்குளம் நீதிமன்றம் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது.

ஆளுநரை பணி செய்ய விடாமல் தடுத்தார் என்ற குற்றச்சாட்டில் முகாந்திரம் இல்லை என கூறியுள்ள நீதிபதி கோபிநாத், நக்கீரன் கோபாலை நீதிமன்ற காவலுக்கு அனுப்பி சிறையில் அடைக்க கோரிய அரசு வழக்கறிஞரின் கோரிக்கையை ஏற்க மறுத்து அவரை விடுதலை செய்து விட்டார் .

இந்த தீர்ப்பை கொண்டாடிவரும் நெட்டிசன்ஸ் பல வகைகளில் பதிவுகள் இட்டு அவரை கலாய்த்து வருகின்றனர் .. உலகம் முழுவதும் பரவிய #gobackmodi ஹாச்டாக் விஷயத்தில் டிடிவி தினகரன் மோடியை அதரித்தது ., இப்போவும் நக்கீரன் கோபால் விஷயத்திலே மறுபடியும் பகிரங்கமாக பாஜகவின் ஆளுனர் நிலையை ஆதரித்து தான் பாஜக வின் ஊதுகூழல் தான் என்பதை டிடிவி தினகரன் நிருபித்து விட்டார் என்றும் பலரும் கூறி வருகின்றனர்