ஜோதிகா பேச்சில் சமத்துவம் இல்லை. அவர் பேசும்போது சர்ச், மசூதியையும் சேர்த்து பேசியிருக்க வேண்டும். திமுகவும் மற்ற பயனற்ற கட்சிகளும் பிற மதத்தை கேடயமாக பயன்படுத்துகிறார்கள் என்று பாஜக ஆதரவாளர் காயத்ரி ரகுராம் சர்ச்சையை கிளப்பியுள்ளார்.

ராட்ச்சசி படத்திற்காக ஒரு தனியார் நிகழ்ச்சியில் சில மாதங்களுக்கு முன்பு ஜோதிகாவுக்கு விருது வழங்கபட்டது. அந்த மேடையில் பேசிய நடிகை ஜோதிகா கோவில்களுக்கு செலவு செய்யும் பணத்தை நீங்கள் பள்ளிகளுக்கும், மருத்துவமனைகளுக்கும் செலவிடுங்கள் என்று வேண்டுகோள் விடுத்திருந்தார்.

இத்தனை நாட்கள் கழித்து தற்போது சமூகவலைத்தளங்களில் ஜோதிகா பேசிய இந்த காணொளி திடீரென வைரலாகி வருகிறது. இதில் ஜோதிகா பேசியதை ஆதரித்தும், எதிர்த்தும் சமூக வலைத்தளங்கள்ளில் சண்டையிட்டு வருகின்றனர். எஸ்வி சேகர் உள்பட பல பாஜக ஆதரவாளர்கள் தங்கள் கண்டனங்களை கடுமையாகவே ஜோதிகாவுக்கு தெரிவித்து வருகின்றனர்.

மேலும் வாசிக்க: ஜோதிகா கோயில்கள் பற்றி பேசியது முதிர்ச்சியற்ற பேச்சு -நடிகர் எஸ்.வி.சேகர் சர்ச்சை

தற்போது காயத்ரி ரகுராம் தனது ட்விட்டரில், “நடிகர்களுக்கு கோயில் கட்டும் கும்பலுக்கு அவ்வளவு தான் அறிவு. நடிகர்களுக்காக கோயில்களை கட்டியவர்கள் எப்பவுமே சனாதன தர்மத்தை புரிந்து கொள்ள முடியாது. அவர்களின் மூளை அப்படி. திமுக, திக, நாம் தமிழர், விசிக கட்சிகளின் கைக்கூலிகள் ஆதாரமற்ற கருத்துகளுடன் வருகின்றனர். ஜோதிகா பேச்சை நியாயப்படுத்துபவர்கள் வெட்கக்கேடானவர்கள்து. இதற்கு நடிகை ஜோதிகா உடனடியாக மன்னிப்பு கேட்க வேண்டும்.

இந்துக்கள் என்னவோ, சமத்துவத்திற்கு தயாராகத்தான் உள்ளனர். மற்ற மதம் சமத்துவத்திற்கு தயாரா., ஜோதிகா பேச்சில் சமத்துவம் இல்லை. அவர் பேசும்போது சர்ச், மசூதியை உள்ளடக்கியிருக்க வேண்டும். திமுகவும் மற்ற பயனற்ற கட்சிகளும் பிற மதத்தை கேடயமாகப் பயன்படுத்துகிறார்கள்” என்று பதிவிட்டுள்ளார். இதற்கு திமுக, திக, நாம் தமிழர், விசிக என அனைத்து கட்சியினரும் ஒன்று திரண்டு எதிர்த்து வருகின்றனர்.

இந்நிலையில், தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு, ஜோதிகாவை ஆதரித்து தனது கருத்தை பததிவிட்டுள்ளார். அதில், “ராட்ச்சசி படத்தில் பேசிய வசனத்தின் பொருளை நேரில் உணர்ந்த ஜோதிகா அண்ணி, அப்படத்திற்காக விருது வழங்கப்பட்ட பொழுது பேசியது அரைகுறை அர்த்தம் கண்டு அநாகரீகமாக சில அன்பர்களால் பிரபலப்படுத்தப்பட்டு வருகிறது.

நல்ல கருத்தை நாடறியச் செய்வதே உங்கள் வெறுப்பு அரசியலின் சாதனை.வேறென்ன சொல்ல” என்று கூறியுள்ளார். ஜோதிகா பேசிய காணொளியை பார்த்து தவறாக புரிந்து கொண்டு இவர்கள் காட்டும் வெறுப்பு அரசியல் மிகவும் மோசமானது என்று பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.