இந்திய ராணுவத்தினர் 20 பேர் கொல்லப்பட்டதைக் கண்டித்து பாஜக ஆதரவாளர்கள் சிலர், சீனாவிற்கு எதிர்ப்பு தெரிவிப்பதற்காக வட கொரிய அதிபரின் உருவ பொம்மையை எரித்துப் போராட்டத்தில் ஈடுபட்டது சர்ச்சையாகி உள்ளது.

லடாக் எல்லையில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் இந்திய, சீன ராணுவத்தினரிடையே ஏற்பட்ட மோதலில் தமிழகத்தைச் சேர்ந்த பழனி உட்பட 20 இந்திய இராணுவ வீரர்கள் வீர மரணம் அடைந்ததாக இந்திய இராணுவத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் சீன இராணுவ வீரர்கள் எத்தனை பேர் உயிரிழந்தனர் என்பது குறித்து சீனா தரப்பிலிருந்து அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வெளியாகவில்லை.

இந்நிலையில் சமூக வலைதளங்களில் ஆர்எஸ்எஸ், பாஜக மற்றும் இந்துத்துவா அமைப்பினர் சீனாவிற்கு எதிராக சீன தயாரிப்பு பொருட்களை புறக்கணிப்பதாக கூறி, சீனப் பொருட்கள் சிலவற்றை சேதப்படுத்தி புகைப்படம் வீடியோ ஆகியவற்றை சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

அந்த வகையில் மேற்குவங்கத்தின் அசோன்சோலைப் பகுதியைச் சேர்ந்த பாஜக ஆதரவாளர்கள் சிலர், சீனாவிற்கு எதிர்ப்பு தெரிவிப்பதற்காக சீன அதிபர் சீ ஜின்பிங்கின் உருவ பொம்மைக்குப் பதிலாக வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன்னின் உருவபொம்மையை எரித்துப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

[su_youtube url=”https://www.youtube.com/watch?v=WuxqKLtEhnE&feature=emb_logo” width=”700″ autoplay=”yes” title=”சீனாவை எதிர்க்க வட கொரிய அதிபரின் உருவ பொம்மை எரித்துப் போராடிய பாஜகவினர்”]

போராட்டத்தில் இந்தியர்கள் இந்தியப் பொருட்களையே பயன்படுத்த வேண்டும் என்பதையும் வலியுறுத்தினர். இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.

மேலும் வாசிக்க: ஓபிசி பிரிவினருக்கு 50% இடஒதுக்கீடு கோரிய வழக்கில், 27% வழங்க மத்திய அரசு ஒப்புதல்