‘மாநாடு’ படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக கல்யாணி பிரியதர்ஷன் நடிக்கிறார் என்ற தகவலை படத் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

வந்தா ராஜாவாதான் வருவேன் படத்தை தொடர்ந்து சிம்பு அடுத்ததாக மாநாடு படத்தில் நடிக்க இருக்கிறார். வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாக இருக்கும் இப்படத்தை சுரேஷ் காமாட்சி தயாரிக்க இருக்கிறார். படத்தின் எடிட்டராக பிரவீன் கே.எல். ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

தற்போது இப்படத்தில் பிரபல இயக்குனர் பிரியதர்ஷனின் மகள் கல்யாணி பிரியதர்ஷன் கதாநாயகியாக நடிக்க ஒப்பந்தம் ஆகியிருக்கிறார். இதை இப்படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார்.

முன்னதாக மாநாடு படம் கைவிடப்பட்டதாகத் தகவல் பரவியது. ஆனால், அந்தத் தகவல் உண்மையில்லை என விளக்கம் அளித்தார் சுரேஷ் காமாட்சி. படப்பிடிப்பு குறித்த தகவல் விரைவில் அறிவிக்கப்படும் என அவர் அறிவித்துள்ளார்