சர்வதேச திரைப்பட விழாவில் 20க்கும் மேற்பட்ட விருதுகளை வென்ற ‘வாய்தா’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி, சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

அறிமுக இயக்குனரான மகிவர்மன் இயக்கத்தில் நடிகர்கள், தயாரிப்பாளர்கள், இசையமைப்பாளர்கள் என பல புதுமுகங்களைக் கொண்டு தயாரிக்கப்படும் படம் ‘வாய்தா’. பல்வேறு சர்வதேச திரைப்பட விழாக்களில் பங்கேற்ற ‘வாய்தா’ திரைப்படம் இதுவரை 20க்கும் மேற்பட்ட விருதுகளை பெற்றுள்ளது

இப்படத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியக் குழு உறுப்பினர் மகேந்திரனின் மகன், புகழ் மகேந்திரன் ஹீரோவாக அறிமுகமாகிறார். ஜோக்கர், கே.டி. என்கிற கருப்பத்துரை படம் மூலம் பிரபலமான நடிகர் மு.ராமசாமி, நாசர் மற்றும் அறிமுக நாயகி ஜெசிகா பவுலின், நக்கலைட்ஸ் புகழ் பிரசன்னா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

வராஹா சுவாமி பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் கே.வினோத்குமார் தயாரித்துள்ள இப்படத்திற்கு அறிமுக இசையமைப்பாளர் சி.லோகேஷ்வரன் இசையமைத்துள்ளார். இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் மோஷன் போஸ்டரை இன்று நடிகர் விஜய் சேதுபதி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

இந்நிலையில், இந்த படக்குழுவுக்கு பிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். மேலும் ‘வாய்தா’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சமூக வலைதளங்களில் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.

72வது குடியரசு தினத்தையொட்டி பத்மஸ்ரீ, பத்ம விபூஷண், பத்ம பூஷன் விருதுகள் அறிவிப்பு