ஜெயம் ரவி நடிப்பில் உருவாகி வரும் “கோமாளி” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.

அடங்கமறு படத்தைத் தொடர்ந்து ஜெயம் ரவி தனது 24ஆவது படமான கோமாளி படத்தில் நடித்து வருகிறார். காமெடிப் படமாக உருவாகும் இப்படத்தில் முதன்முறையாக ஜெயம் ரவி, ராஜா, ஆதிவாசி மற்றும் பிரிட்டிஷ் காலத்து அடிமை என்று 9 வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடிக்கிறார்.

இப்படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடிக்கிறார். மேலும், சம்யுக்தா ஹெக்டே, யோகி பாபு, கே.எஸ்.ரவிக்குமார் உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்து வருகின்றனர். ஐசரி தயாரித்து வரும் இப்படத்திற்கு ஹிப்ஹாப் தமிழா இசையமைக்கிறார்.

அண்மையில், இப்படத்தின் டைட்டில் அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது, இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி வைரலாகி வருகிறது. அதில் மன நோயாளி போன்று ஜெயம் ரவி காட்சியளிக்கிறார். அவரைச் சுற்றி சமூகவலைதளங்களின் குறியீடுகள் உள்ளன. அதோடு, கோமாளி என்ற எழுத்துக்களில் முறையே 1990, 2000, 2005, 2010, 2013, 2016 ஆகிய ஆண்டுகள் குறிப்பிடப்பட்டுள்ளன.

தகவல் தொழில்நுட்ப துறையில் வளர்ச்சியும், அதன் பாதிப்புகளையும் நகைச்சுவையாக விளக்கும் படமாக இப்படம் அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.