கொரோனா தடுப்பு பணியை முறையாக மேற்கொள்ள தவறியதாக பிரேசில் அதிபர் ஜெய்ர் போல்சனாரோவுக்கு எதிராக 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் போராட்டம் நடத்தினர்.

உலக அளவில் அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக பிரேசில் நாட்டில் தான் அதிகளவிலான மக்கள் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர். தற்போது வரை 4.61 லட்சம் பேர் கொரோனாவுக்கு உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில், பிரேசில் நாட்டில் கொரோனா தடுப்பு பணியை முறையாக மேற்கொள்ள தவறியதாகச் சொல்லி அந்த நாட்டு அதிபர் ஜெய்ர் போல்சனாரோவுக்கு எதிராக ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ரியோ டி ஜெனீரோ உட்பட பல்வேறு முக்கிய நகரங்களில் திரண்ட 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் இந்தப் போராட்டத்தில் கலந்து கொண்டனர். அப்போது போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் சிலர் அதிபர் ஜெய்ர் போல்சனாரோ பதவி விலக வேண்டுமென்ற கோஷத்தையும் எழுப்பினர்.

மேலும் சிலர் அதிபர் ஜெய்ர் போல்சனாரோவை ஒரு இனப்படுகொலையாளர் எனவும் கூறினர். ஆரம்பத்திலிருந்தே அதிபர் தொற்று பரவலை தடுப்பதில் மெத்தனமாக செயல்பட்டதாகவும் மக்கள் குற்றம்சாட்டினர்.

[su_image_carousel source=”media: 23883,23882″ crop=”none” captions=”yes” autoplay=”3″ image_size=”full”]

கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த தடுப்பூசியின் முக்கியத்துவத்தை அறிந்திருந்தால், லட்சக்கணக்கான உயிர்கள் காப்பாற்றப்பட்டிருக்கும் என்பது அதிபர் போல்சனாரோ மீது மக்களின் குற்றச்சாட்டு ஆகும்.

தீவிர வலதுசாரி அரசியல்வாதியான போல்சனாரோ, தொற்றுநோயின் ஆரம்பத்தில் COVID-19, ஒரு சிறிய காய்ச்சல், முகக்கவசம் அவசியமில்லை எனக் கூறிவந்தார். மேலும் பயனற்ற மருந்துகளை பிரபலப்படுத்துவது, தடுப்பூசிகளின் சலுகைகளை மறுப்பது மற்றும்

ஆக்ஸிஜன் பற்றாக்குறையை எதிர்பார்க்கத் தவறியது, நோயாளிகளுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டபோது ஆக்சிஜன் இல்லாதது உள்ளிட்ட காரணங்களால் கொத்து கொத்தாக மக்கள் இருந்ததே இப்போராட்டத்திற்கு முக்கிய காரணமாக அமைந்தது.

கொரோனா பேரிடரில் CAA அமல்படுத்தும் பாஜக அரசு; குடியுரிமை வழங்க மாவட்ட ஆட்சியர்களுக்கு அதிகாரம்