கொரோனா வைரஸ்க்கு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் தீவிரமாக உள்ள அமெரிக்கா, ரெம்டிசிவிர் என்ற புதிய மருந்தை உருவாக்கி, விரைவில் சிகிச்சை பயன்பாட்டிற்கு கொண்டுவர அங்கீகாரம் வழங்க திட்டமிட்டுள்ளது.

சீனாவில் டிசம்பரில் தொடங்கிய கொரோனா பரவல் மிக குறைந்த நாட்களில் உலகம் முழுதும் பரவி விட்டது. உலகில் ஏழை, பணக்காரன், சாதி, மதம், இனம், மொழி என எந்த பாகுபாடும் இல்லாமல் ஒட்டுமொத்தமாக உலகை சிதைத்து வருகிறது. இதற்கு வளரும் நாடுகளை காட்டிலும் வளர்ந்த நாடுகளே மிக மோசமான அழிவை சந்தித்துள்ளன. குறிப்பாக அமெரிக்கா மற்றும் ஐரோப்பா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகளில் தினமும் 1000 கணக்கில் இறக்கின்றனர்.

அமெரிக்காவில் கொரோனா பாதிப்புக்குள்ளானவர்கள் எண்ணிக்கை 11 லட்சத்தைக் கடந்துள்ளது. 1 லட்சத்து 33 ஆயிரம் பேர் குணமாகியுள்ள நிலையில், உயிழந்தவர்கள் எண்ணிக்கையும் 63766 ஆக அதிகரித்துள்ளது. இதனால் கொரோனா தொற்றுக்கு மருந்து கண்டுபிடிக்க பல்வேறு ஆராய்ச்சிகளையும் மேற்கொண்டுவருகிறது.

மேலும் வாசிக்க: கொரோனா தடுப்பு கிட்ஸ் பற்றாக்குறை காரணமா..மருத்துவர் பிரதீபா மரணத்தில் சர்ச்சை

இந்நிலையில் ரெம்டிசிவிர் மருந்து கொரோனா தொற்றிலிருந்து நோயாளிகளை விரைவாக காப்பதாக அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் பரிந்துரைந்துள்ளனர். ஸ்டான்போர்ட் யுனிவர்சிட்டி ஸ்கூல் ஆஃப் மெடிசின் நிறுவனம் சார்பில் இந்த மருந்தை நோயாளிகளிடம் பரிசோதித்ததில் விரைவில் மீட்பதற்கான சான்றுகள் கிடைத்துள்ளதாக தெரிவித்துள்ளனர்

எனினும் அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து கட்டுப்பாடு நிரவாகம் இதுவரை எந்த ஒரு மருந்துக்கும் கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்கலாம் என்று ஒப்புதல் அளிக்கவில்லை. ஆனால் ரெம்டிசிவிர் மருந்தை அவசர கால சூழலுக்கு பயன்படுத்தலாம் என்று அறிவித்துள்ளது. மேலும் இது தொடர்பாக ரெமெடிசிவிர் மருந்து தயாரிப்பாளரான கிலியட் சயின்ஸ் நிறுவனத்திதுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக கூறப்பட்டுள்ளது.