உலகம் முழுவதும் பல நாடுகளில் கொரோனவை கட்டுப்படுத்த கோடிக் கணக்கில் முதலீடு செய்து ஆராய்ச்சிகள் நடந்து வருகிறது. இந்தியாவில் மாட்டுக் கோமியத்தை குடித்தால் வைரஸை எதிர்க்கும் சக்தி கிடைக்கும் என்று மேற்கு வங்க மாநில பாஜக தலைவர் திலீப் கோஷ் கூறியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள துர்காபூரில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பாஜக தலைவர் திலீப் கோஷ், “பசுவை பற்றி பேசினாலே சிலருக்கு அலர்ஜியாகிவிடுகிறது. பசுவின் மகத்துவம் குறித்து கழுதைகளுக்கு என்ன தெரியும்.

இது இந்துக்களின் தேசம். பசுக்களை தெய்வமாக வணங்கிய கிருஷ்ணரின் பூமி இது. நமது உடல் திடகாத்திரமாக இருக்க கோமியத்தை குடிக்க வேண்டும். மதுபானங்களை குடிக்கும் நபர்களால் எப்படி பசுவின் மகத்துவத்தை உணர்ந்து கொள்ள முடியும்” என பேசியுள்ளார்.

கோமியத்தை குடிப்பது தொடர்பாக அவ்வப்போது திலீப் கோஷ் கருத்துகளை கூறி சர்ச்சைகளை ஏற்படுத்துவது வழக்கம். இம்முறை கொரோனா பரவல் காலத்திலும் திலீப் கோஷ் இதேபோல் கருத்துகளை வெளிப்படுத்தியுள்ளார்.

உலக நாடுகள் பலவும் கோடி கணக்கில் மருந்துகளை கண்டுபிடிக்க முதலீடு செய்து ஆராய்ச்சி நடந்தி வரும் நிலையில், மோடி தலைமையிலான ஆளும் பாஜக தலைவர் திலிப் கோஷ் இப்படி பேசியிருப்பது பலரது கண்டனங்களையும் பெற்றுள்ளது.

மேலும் வாசிக்க: இந்தியாவில் சமூக பரவல், மிக மோசமான நிலையில் உள்ளது.. எச்சரிக்கும் இந்திய மருத்துவ சங்கம்